வாட்ஸ்அப்பில் இன்சூரன்ஸ் சேவைகள் – எப்படி பெறுவது? என்ன நன்மைகள்?
Easy Insurance via WhatsAp : வாட்ஸ்அப் மூலம் இன்சூரன்ஸ் சேவையை பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதனால் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி சரியான இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுப்பது, அதனை நிர்வகிப்பது மிகவும் எளிதாகி விட்டது. வாட்ஸ்அப் மூலம் இன்சூரன்ஸ் சேவையை பெறுவதால் என்ன நன்மைகள் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நம் வாழ்க்கையில் வாட்ஸ்அப்பின் (WhatsApp) பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. நண்பர்களுடன் உரையாடுதல் மட்டுமின்றி, அலுவலக பணிகளை ஒருங்கிணைப்பதற்காக குரூப்களை உருவாக்குவது, டிக்கெட் முன் பதிவு, பணப்பரிமாற்றம் போன்ற பல வேலைகளுக்கு வாட்ஸ்அப் இன்றியமையாததாக மாறிவிட்டது. மற்ற சமூக வலைதளங்களைப் (Social Media) போல வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் அல்லாமல் வாட்ஸ்அப் நமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், இந்தியாவின் முன்னணி இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி இன்சூரன்ஸ் சேவைகளை எளிதாக்கியுள்ளன.
வாட்ஸ்அப்பில் போன் பேசுவது, நண்பர்களுடன் சாட் செய்வது போலவே, வாடிக்கையாளர் தங்களுடைய இன்சூரன்ஸ் விவரங்களை நிர்வகிக்கலாம். சரியான இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுப்பது, பாலிசியை புதுப்பிப்பது, கிளைம் செய்வது, டாக்குமெண்ட்கள் பதிவேற்றம் மற்றும் ஹெல்த் கார்டு பார்வையிடுதல் உள்ளிட்ட பல செயல்களை ஒரே இடத்தில் மேற்கொள்ளலாம்.
முன்னணி நிறுவனங்களின் வாட்ஸ்அப் சேவைகள்
HDFC ERGO General Insurance
வாட்ஸ்அப் எண் +91 8169500500 மூலம் இந்நிறுவனத்துடன் வாட்ஸ்அப்பில் இணையலாம். மேலும் பாலிசி பெறுவது, புதுப்பித்தல், கிளைம் செய்ய, ஹெல்த் கார்டை பார்க்க, 24 மணி நேரமும் ரியல்-டைம் கிளைம் டிராக்கிங் வசதியைப் பெற போன்ற பல சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
ICICI Lombard General Insurance
இந்நிறுவனத்தின் வாட்ஸ்அப் எண் +91 7738282666 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் மூலம்
ஹெல்த் இன்சூரன்ஸ் பெறுவது, கிளைம் ஃபைலிங், டாக்குமெண்ட்அப்டேட் செய்வது, ஹெல்த் டிப்ஸ் உள்ளிட்ட பல வசதிகள் கிடைக்கும். மேலும் இந்த வாட்ஸ்அப் பக்கம் வாடிக்கையாளர் சேவை மையமாகவும் விளங்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம்.
Policybazaar
பாலிசி பஜாரின் அதிகார்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான +91 8506013131 மூலம்
பாலிசி பரிந்துரைகள், டாக்குமெண்ட் அப்டேட் செய்ய, 2 வீலர் இன்சூரன்ஸ் புதுப்பிக்க, பணப்பரிவர்த்தனைகள் செய்ய ஆகியவற்றுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
Aditya Birla Health Insurance
இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான +91 8828800035 மூலம் பாலிசிக்கான
பிரீமியம் செலுத்துதல், பாலிசியை புதுப்பிக்க, டாக்குமெண்ட் பதிவேற்றம் போன்ற அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறலாம்.
Bajaj Allianz Life Insurance
இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான +91 8806727272 மூலம் கிளைம் டிராக்கிங், பிரீமியம் செலுத்துதல், லைவ் சப்போர்ட் வசதி போன்ற 20க்கும் மேற்பட்ட சேவைகளைப் பெறலாம்.
Tata AIA Life Insurance
வாட்ஸ்அப் எண் +91 7045669966 மூலம் இந்நிறுவனத்தின் இன்சூரன்ஸ் திட்டங்கள், ஹெல்த் ரிவார்ட்ஸ், பாலிசி தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள போன்ற பல சேவைகளை செய்யலாம்.
வாட்ஸ்அப் மூலம் இன்சூரன்ஸ் பாலிசியை நிர்வகிப்பது நமக்கு பல வழிகளில் உதவி செய்யும். வாடிக்கையாளர் சேவை மையத்தை உடனடியாக குறையும். அடிக்கடி டாக்குமென்ட்களை பிரிண்ட் அவுட் எடுக்கும் பிரச்னைகள் இருக்காது. நமக்கு தனிப்பட்ட முறையில் சேவைகளை பெறலாம் என்பது போன்ற பல நன்மைகள் இருக்கின்றன.