Thug Life : திரிஷாவின் அருமையான டான்ஸ்.. தக் லைஃப் படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ இதோ!
Thug Life Movie Second Single Promo: நடிகர்கள் கமல் ஹாசன், த்ரிஷா, சிலம்பரசன் போன்றவர்களின் முன்னணி நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நடிகை த்ரிஷாவின் நடனத்தின் இரண்டாவது பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் மணிரத்னம் (Mani Ratnam). இவரின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைஃப் (Thug Life). பொன்னியின் செல்வன் பாகம் 2 (Ponniyin Selvan Part 2) படம் வெளியாகி ஹிட்டானதை தொடர்ந்து, இந்த படத்தை இயக்கப்போவதாகக் கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவித்திருந்தார். இந்த தக் லைஃப் படத்தின் கதையை நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) எழுதியுள்ளார். கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தில், நடிகர் சிலம்பரசனும் (Silambarasan) லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்டக் கமலும் , சிலம்பரசனும் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முற்றிலும் ஆக்ஷ்ன் எமோஷன் மற்றும் அதிரடி காதல் என மாறுபட்ட திரைக்கதைகளுடன் உருவாகியுள்ளது.
மேலும் இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த 2025, மே 17ம் தேதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது. அதைத் தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்புகளும் வெளியானது. அதன்படி சுகர் பேபி என்ற இரண்டாவது பாடல் வரும் 2025, மே 21ம் தேதியில், மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
இதைத் தொடர்ந்து படக்குழு அந்த பாடலின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது . அந்த வீடியோவில் நடிகை த்ரிஷாவின் நடனத்துடன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
Sweet surprise hits tomorrow at 5pm. Don’t miss it!#SugarBaby Second Single from May 21#ThuglifeAudioLaunch from May 24#Thuglife#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR #IMAX
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran… pic.twitter.com/2oRMFZGgc5— Raaj Kamal Films International (@RKFI) May 20, 2025
இந்த படத்தில் ஆரம்பத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு ஜோடியாக, நடிகை அபிராமி மட்டும் நடித்துள்ளார் என்று அனைவரும் நினைத்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு ஜோடியாக த்ரிஷாவும் நடித்துள்ளது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த படம் வெளியானால்தான் விளக்கமாகத் தெரியும். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியாகவுள்ளது . வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.