தென்னிந்திய மொழியில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய காதல் படங்கள்
Romantic Movies: சினிமா ரசிகர்கள் இடையே ஒவ்வொரு ஜானருக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சினிமாவில் ஹாரர், த்ரில்லர், ரொமாண்டிக், காமெடி என பல வெரைட்டி இருக்கிறது. இந்த ஒவ்வொரு ஜானருக்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் ஓடிடியில் பார்க்க வேண்டிய பெஸ்ட் ரொமாண்டிக் படங்களை தற்போது பார்க்கலாம்.

பிரேமம்: இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் (Alphonse Puthren) இயக்கத்தில் 2015-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான படம் பிரேமம். இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன், ஷபரீஷ் வர்மா, கிருஷ்ணா சங்கர், சிஜு வில்சன், ஆனந்த் நாக், வினய் ஃபோர்ட், சௌபின் ஷாஹிர், ஷரபுதீன் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியான போது மலையாள சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தனர். குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தை மிகவும் ரசித்தனர். இந்தப் படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் தான் நடிகை சாய் பல்லவி சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக மலரே பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
சீதா ராமம்: இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான படம் சீதா ராமம். இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருந்தார். நடிகை மிருணாள் தாக்கூர் நாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பையும் ஒரு ராணிக்கும் ராணுவ வீரருக்கும் இடையேயான காதல் கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த காதலை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார். படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குறுமுகிழ், காலங்கள் தாண்டி பாடல்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
ஓ காதல் கண்மணி: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ஓ காதல் கண்மணி. இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாகவும் நடிகை நித்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார். லிவின் ரிலேஷன்ஷிப்பை தமிழ் சினிமாவில் முதன் முதலில் பேசிய படம் ஓ காதல் கண்மணி.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போதும் காதலில் இருக்கும் காதல் ஜோடிகள் இந்தப் பாடல்களை கொண்டாடி வருகின்றனர்.