UAN எண் உடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நிறைவு.. இனி இதை செய்ய முடியாது.. EPFO திட்டவட்டம்!
UAN Aadhaar Linking Deadline Passed | ஆதார் கார்டுடன், யுஏஎன் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் முடித்துக்கொண்டுள்ளது. தொடர்ந்து இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், இனி காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கோப்பு புகைப்படம்
யுஏஎன் (UNA – Universal Account Number) எண்ணுடன் ஆதார் கார்டை (Aadhaar Card) இணைப்பதற்கான காலக்கெடு நிறைவடைந்திவிட்டதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) கூறியுள்ளது. ஊழியர்கள் தங்களது யுஏஎண் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அது நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் , இனி ஆதார் கார்டுடன் யுஏஎன் எண்ணை இணைந்தவர்கள் மட்டுமே இசிஆர் (ECR – Electronic Challan Cum Return) செய்ய முடியும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள இந்த முக்கிய அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
யுஏஎன் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் காலக்கெடு நிறைவு – இபிஎஃப்ஓ
டிசம்பர் 1, 2025 அன்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் அக்டோபர் 31, 2025 அன்றுடன் முடிவடைந்த காலக்கெடு தான் ஆதார் கார்டு மற்றும் யுஏஎன் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி என்று கூறியுள்ளது. 2021, ஜூம் மாதம் முதல் ஆதார் கார்டுடன் யுஏஎன் எண்ணை இணைப்பது குறித்து இபிஎஃப்ஓ தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அதற்கான கால அவகாசத்தை முடித்துக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க : அதிரடியாக விலை குறைந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்!
இனி இவர்களால் இசிஆர் மேற்கொள்ள முடியாது
ஆதார் கார்டு மற்றும் யுஏஎன் எண்ணை இணைக்காத நபர்களால் இனி இசிஆர் மேற்கொள்ள முடியாது என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நவம்பர் 2025 முதல் ஆதார் கார்டுடன், யுஏஎன் இணைத்துள்ள நபர்களால் மட்டுமே இசிஆர் மேற்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க : Credit Card : கிரெடிட் கார்டு மோசடி நடைபெற்றால் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷ்யங்கள் இதுதான்!
போதிய அவகாசம் வழங்கப்பட்டு விட்டது – இபிஎஃப்ஓ
ஆதார் கார்டுடன், யுஏஎன் எண்ணை இணைப்பதற்கான போதிய அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதாகவும், இன்னும் ஒருசில கணக்குகளில் மட்டுமே அது செய்யப்பாடமல் உள்ளதாகவும் இபிஎஃப்ஓ கூறியுள்ளது. இந்த நிலையில், கூடுதல் தாமதங்களை தவிர்க்கும் வகையில் காலக்கெடுவை முடித்துக்கொள்வதற்கான முடிவை எடுத்துள்ளதாக இபிஎஃப்ஓ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.