இந்தியாவில் உள்ள கார் இன்சூரன்ஸ் வகைகள் என்ன? சிறந்ததை தேர்ந்தெடுப்பது எப்படி?
Know Your Car Insurance : வாகன காப்பீடு என்பது விபத்து, கார் திருட்டு போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இந்தியாவில் வாகன காப்பீடு என்பது கட்டாயமாகும். இது விபத்து போன்ற பிரச்னைகளில் ஏற்படும் நிதி சிக்கல்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்னறன. இந்தியாவில் 4 வகை காப்பீடுகள் இருக்கின்றன. அவை குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
கார் இன்சூரன்ஸ் (Car Insurance) என்பது உங்கள் காருக்கு நேரும் விபத்து, திருட்டு, இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றின் போது ஏற்படும் நிதி நெருக்கடிகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். இது இந்தியாவில் சட்டப்படி கட்டாயமாகும். இந்தியாவில் நான்கு வகையான கார் காப்பீடுகள் உள்ளன. காப்பீடுகள் விபத்துக்கள் போன்ற பிரச்னைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இந்தியாவில் வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டியது கட்டாயம். இன்சூரன்ஸ் இல்லையென்றால் நமக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்க உரிமை உண்டு. மேலும் வாகனம் திருட்டு போன்ற நேரங்களில் இன்சூரன் நமக்கு பெரிதும் கைகொடுக்கும்.
வாகன காப்பீடுகளின் வகைகள்
இவற்றில் முதலாவது மூன்றாம் தரப்பு காப்பீடு ஆகும். இது சட்டப்பூர்வமாக கட்டாயமாகும். சாலை விபத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். இரண்டாவது விரிவான காப்பீடு (Comprehensive Insurance). இது உங்கள் கார், காரில் பயணிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, திருட்டு, தீ விபத்து, இயற்கை பேரிடர்கள் போன்ற அனைத்துக்கும் நஷ்ட ஈடு வழங்கும். அதிக பாதுகாப்பு வேண்டுமென்றால் இதைத்தான் தேர்வு செய்ய வேண்டும். பயன்பாட்டு அடிப்படையிலான காப்பீடு (Pay As You Drive Insurance). இந்த வகை காப்பீட்டில், உங்கள் கார் எவ்வளவு மைல் ஓடுகிறது என்பதைப் பொறுத்து நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டும். குறைவாக பயன்படுத்துபவர்கள் இந்த வகையை எடுத்தால் பணத்தை மிச்சப்படுத்தலாம். சொந்த சேத காப்பீடு (Own Damage Insurance). இந்த காப்பீடு உங்கள் சொந்த காருக்கு மட்டும் ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்யும். மற்றவர் காருக்கோ அல்லது பாதிப்புக்கோ இது பொருந்தாது. மூன்றாம் தரப்பு காப்பீட்டுடன் சேர்த்து எடுத்தால் மட்டுமே முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.
இதையும் படிக்க: வாகனம் திருடப்பட்டால் இந்த தவறை செய்யாதீர்கள் – காப்பீடு இருந்தாலும் இழப்பீடு கிடைக்காது!
மூன்றாம் தரப்பு காப்பீடு
மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் படி, இந்திய சாலைகளில் ஓடும் ஒவ்வொரு வாகனமும் மூன்றாம் தரப்பு காப்பீட்டை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். மூன்றாம் தரப்பு காப்பீட்டில், காப்பீட்டாளர் வாகனம் ஓட்டும்போது காப்பீடு செய்யப்பட்ட நபரின் ஏதேனும் தவறு காரணமாக மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் காயம் மற்றும் அவரது சொத்து அல்லது வாகனத்திற்கு ஏற்படும் சேதத்தை ஈடு செய்யும். இது நாட்டிலேயே மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் கார் காப்பீட்டு வகைகளில் ஒன்றாகும். இருப்பினும், அதன் உள்ளடக்கத்தின் வரம்பு குறைவாகவே உள்ளது. மூன்றாம் தரப்பு கார் காப்பீடு, காப்பீடு எடுத்த நபரின் வாகனத்திற்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்தை ஈடுகட்டாது.
சொந்த சேத காப்பீடு
இந்த வகையான கார் காப்பீட்டில், வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக பாலிசிதாரரால் ஏற்படும் செலவுகள் திருப்பிச் செலுத்தப்படும். இந்த காப்பீட்டின் பிரீமியம், காரின் வயது, மாடல், எஞ்சின் திறன் (cc), கார் உரிமையாளரின் இருப்பிடம், தேர்ந்தெடுக்கப்பட்ட கூடுதல் காப்பீடுகள், நோ-க்ளைம் போனஸ் (NCB), காரின் எரிபொருள் வகை, அதில் நிறுவப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. இது உங்கள் கார் முழுமையாக சேதமடைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ காப்பீட்டு நிறுவனம் செலுத்தும் அதிகபட்ச தொகையாகும்.
இதையும் படிக்க: ஓட்டுநரின் மீது தவறு இருந்தால் இழப்பீடு கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி – எந்த காரணங்களுக்கு கிடைக்காது?
விரிவான கார் காப்பீடு
இந்தக் காப்பீடு உங்கள் காருக்கு ஏற்படும் சேதத்தை மட்டுமல்ல, மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதத்திற்கான பொறுப்பையும் உள்ளடக்கியது. இதனுடன், இந்தத் திட்டம் ரூ.15 லட்சம் வரையிலான தனிநபர் விபத்து காப்பீட்டையும் (PAC) வழங்குகிறது, இது வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநருக்கு வழங்கப்படும்.
இந்த காப்பீட்டின் மற்றொரு பெரிய நன்மை என்னவென்றால், உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப வெவ்வேறு கூடுதல் காப்பீடுகளைச் சேர்க்கலாம்.