Magalir Urimai Thogai : பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான முக்கிய தகவல்!

Kalaignar Magalir Urimai Thogai Scheme | தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முகாம்கள் அமைக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அது குறித்து அரசு சார்பில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Magalir Urimai Thogai : பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான முக்கிய தகவல்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

25 Jun 2025 09:05 AM

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக (DMK – Dravida Munnetra Kazhagam) அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (Kalaignar Magalir Urimai Thogai Scheme) செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன் பெற்று வரும் நிலையில், புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், முகாம்கள் அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் மூலம் உரிய ஆவணத்துடன் விண்ணப்பிக்கும் தகுதியான பெண்களுக்கு அடுத்து சில மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை முகாம்கள் குறித்து அரசு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெற்று வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

2021 சட்டமன்ற தமிழக தேர்தல் (2021 Tamil Nadu Assembly Election) வாக்குறுதியின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தது. முதற்கட்டமாக இந்த திட்டத்தில் ஒரு கோடி பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கலைஞர் மகளை உரிமைத் தொகை வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு படிப்படியாக இந்த திட்டத்தில் புதிய பயனர்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது வரை ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இரண்டு கோடியே 16 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், மேலும் பலருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. எனவே ஜூன் மாதம் முதல் புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் தொடங்கும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிறப்பு முகாம்கள் குறித்து அரசு தரப்பில் வெளியான புதிய தகவல்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்க 9,000 முகாம்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் முகாம்கள் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் தான், அரசு சார்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அடுத்த ஒரு வாரத்தில் தேவையான இடங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் முகாம்கள் அமைக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.