இனி ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் இந்த வசதி கிடைக்கும்.. தெற்கு ரயில்வே அசத்தல் திட்டம்!

Blankets and Pillows for Non-AC Sleeper Coaches | இதுவரை ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்யும் நபர்களுக்கு மட்டுமே இதுவரை போர்வை மற்றும் தலையணை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏசி அல்லாத ரயில் பெட்டிகளிலும் போர்வை மற்றும் தலையணை வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இனி ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் இந்த வசதி கிடைக்கும்.. தெற்கு ரயில்வே அசத்தல் திட்டம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

19 Dec 2025 18:40 PM

 IST

இந்தியாவில் பொதுமக்களின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக உள்ளது தான் ரயில்கள். காரணம், ரயில்களில் குறைந்த விலை மிக நீண்ட தூரம் பயணம் செய்யலாம் என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயில்களில் சாதாரண பெட்டி, ஸ்லீப்பர் (Sleeper), ஏசி ஸ்லீப்பர் (AC Sleeper) என பல வகையான பெட்டிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு பெட்டிகளுக்கான ரயில் கட்டணம் மற்றும் சேவைகளில் மாற்றம் இருக்கும். உதாரணமாக ஏசி ஸ்லீப்பர் பெட்டியின் கட்டணம் மற்ற பெட்டிகளை விடவும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த பெட்டியில் பயணிகளுக்கு தலையணை, போர்வை ஆகியவை வழங்கப்படும். இதுவே ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டியில் பயணம் செய்யும் நபர்களுக்கு அவையெல்லாம் வழங்கப்படாது. இந்த நிலையில் தான் தெற்கு ரயில்வே (Southern Railway) முக்கிய முயற்சியை ஒன்றை கையில் எடுத்துள்ளது.

இனி ஏசி அல்லாத ஸ்லீப்பார் பெட்டிகளுக்கும் போர்வை, தலையணை

இதுவரை ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்யும் நபர்களுக்கு மட்டுமே போர்வை, தலையணை வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ஏசி அல்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் நபர்களுக்கும் போர்வை, தலையணை வழங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஜனவரி 1, 2026 முதல் இந்த சேவையை தெற்கு ரயில்வே தொடங்க உள்ளது. சோதனை முயற்சியாக முதலில் 10 ரயில்களில் மட்டும் இந்த சேவையை வழங்க திட்டமிட்டுள்ள தெற்கு ரயில்வே போக போக இந்த சேவையை மற்ற ரயில்களிலும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

இதையும் படிங்க : இனி 7 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட்.. ஆர்பிஐ-ன் அசத்தல் திட்டம்!

கட்டணம் செலுத்தி போர்வை, தலையணை வாங்கிக்கொள்ளலாம்

ஏசி அல்லாத பெட்டிகளில் தலையணை, போர்வை ஆகியவற்றை விருப்பத்தின் அடிப்படையில் வழங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தேவை உள்ள பயணிகள் கட்டணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்.

  • ரூ.50 செலுத்தி ஒரு போர்வை, ஒரு தலையணை மற்றும் தலையணை உறை ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
  • ரூ.30 செலுத்தி ஒரு தலையணை, ஒரு தலையணை உறையை வாங்கிக்கொள்ளலாம்.
  • ரூ.20 செலுத்தி ஒரு போர்வை மட்டும் வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : December Changes : கேஸ் சிலிண்டர் விலை முதல் பான் கார்டு வரை.. டிசம்பரில் வர உள்ள முக்கிய மாற்றங்கள்!

மேற்குறிப்பிட்டபடி, பயணிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப போர்வை மற்றும் தலையணை வாங்கிக்கொள்ள தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. டிக்கெட் முன்பதிவின்போதோ அல்லது ரயில் பயணத்தின்போதோ கட்டணம் செலுத்தி இந்த சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..