SCSS : மாதம் தோறும் ரூ.17,000 வருமானம் பெறலாம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் திட்டம்!

Senior Citizen Saving Scheme | அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.17,000 வட்டியாக பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

SCSS : மாதம் தோறும் ரூ.17,000 வருமானம் பெறலாம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் திட்டம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

20 Feb 2026 17:31 PM

 IST

வேலைக்கு சென்றோ அல்லது தொழில் செய்தோ பணம் சம்பாதிப்பது மட்டுமன்றி, சம்பாதித்த பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு திட்டங்களில் முதலீடு செய்து, பல மடங்காக உயர்த்துவது தான் சரியான நிதி மேலாண்மையாக கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய முயற்சி செய்து போலியான நிறுவனங்கள் மற்றும் திட்டங்களில் சிக்கிக்கொண்டு தங்களது பணத்தை இழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக பலரும் தங்களது பணத்தை முதலீடு செய்ய முன்வருவதில்லை. ஆனால், இத்தகைய எந்த வித கவலையும் இல்லாமல் முதலீடு செய்து அதிக லாபம் பெற கூடிய திட்டம் ஒன்று உள்ளது. அதுதான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS – Senior Citizen Saving Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் மாதம் வட்டியாக மட்டுமே ரூ.17,000 பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.25 முதலீடு செய்தால் மாதம் ரூ.17,000 வட்டி

அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் தங்களது ஓய்வுக்கு பிறகு தடையின்றி வருமானம் பெறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒருவர் ரூ.25 லட்சம் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் மாதம் மாதம் அவர்களுக்கு ரூ.17,000 வட்டி வரவு வைக்கப்படும்.

இதையும் படிங்க : எகிப்தில் 3,000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் கண்டுபிடிப்பு.. வியப்பூட்டும் தங்க சுரங்கம்!

5 ஆண்டுகளில் ரூ.35.25 லட்சம் பெறலாம்

இந்த மூத்த டிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான கால அளவு 5 ஆண்டுகளாக உள்ளது. அதன்படி ரூ.25 லட்சம் இந்த திட்டத்தின் முதலீடு செய்வதன் மூலம் திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.35.25 லட்சம் பெற முடியும். அதாவது முதலீடு செய்த தொகை ரூ.25 லட்சம் மற்றும் அதற்கான வட்டி தொகை ரூ.10.25 லட்சம் ஆகியவை சேர்த்து கிடைக்கும். இந்த திட்டத்தில் மாத வருமானமாக ரூ.17,000 வட்டியை பெற்றுக்கொள்ளாவு, அல்லது திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.35 லட்சம் எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us
மீண்டும் போருக்கு தயாராகும் இஸ்ரேல் - பரபரப்பு தகவல்
ரயில் மூலம் கடத்தப்பட்ட 163 சிறுவர்கள்... துரிதமாக செயல்பட்டு மீட்கப்பட்ட சம்பவம்..
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!