இனி டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு OTP மட்டும் போதாது – ரிசர்வ் வங்கியின் புதிய நடவடிக்கை – காரணம் என்ன?

RBI Security Update: கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. நம் போன் திருடப்பட்டு ஓடிபி மூலம் நம் பணத்தை இழக்கும் அபாயம் சமீக காலமாக அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தவிர்க்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

இனி டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு OTP மட்டும் போதாது - ரிசர்வ் வங்கியின் புதிய நடவடிக்கை - காரணம் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

07 Oct 2025 16:38 PM

 IST

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மோசடிகள் மற்றும் ஆன்லைன் ஸ்கேம் ஆகியவை அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய பாதுகாப்பு நடைமுறையை அறிவித்துள்ளது. இதன் மூலம், உங்கள் மொபைல் போன் திருடப்பட்டாலும், சிம் கார்டு  மாற்றப்பட்டாலும், OTP வந்தாலும் கூட, உங்கள் பணத்தை யாராலும் எடுக்க முடியாது. உங்கள் பணம் பாதுகாப்பா இருக்கும். காரணம் இனி அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் இரு நிலை பாதுகாப்பு என்பது மிகவும் கட்டாயம். இதற்கான புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பை வலுப்படுத்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதன்படி, வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் இரு நிலை பாதுகாப்பு (Two-Factor Authentication) என்பது கட்டாயமாகும். இதனால் இனிமேல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முன்புபோல OTP மட்டும் போதாது, அதோடு கூடுதல் பாஸ்வேர்டு, கைரேகை, முகஅடையாளம்  மூலம் உறுதிப்படுத்தல் அவசியமாகும். இதனால் உங்கள் போன் திருடுபோனால் கூட கவலைப்படத் தேவையில்லை.

இதையும் படிக்க : 2025-ல் தங்கத்தை விட அதிக லாபம் தந்த வெள்ளி.. காரணம் இதுதான்!

இது நீங்கள் ஜிமெயில் அல்லது பிற ஆன்லைன் சேவைகளில் உள்நுழையும் போது பயன்படுத்தும் பாதுகாப்பு முறைபோன்றது. உதாரணமாக, நீங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டு போட்டோல் மட்டும் உங்களால் ஜிமெயில் ஓபனாகாது. ஏற்கனவே ஜிமெயில் லாகின் செய்யப்பட்ட வேறு டிவைஸ்களில் இருந்து அதற்கு அனுமதி கொடுத்தால் மட்டுமே உங்களால் ஜிமெயில் பயன்படுத்த முடியும்.

இதேபோல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் இனி ஓடிபி மட்டுமல்லாமல் கூடுதலாக, உங்கள் மொபைல் பாஸ்வேர்ட், கைரேகை போன்ற பயன்பாட்டிலிருந்து உருவாகும் சாஃப்ட்வேர் டோக்கனை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

சாஃப்ட்வேர் டோக்கன் என்றால் என்ன?

இது ஒரு செயலியாகும்.  அது ஒவ்வொரு சில விநாடிகளுக்கும் ஒரு புதிய பாஸ்வேர்டை (Dynamic Password) உருவாக்கும். அந்த கடவுச்சொல் சில நிமிடங்களில் தானாகவே காலாவதியாகிவிடும். இதனால் ஹேக்கர்கள் உங்கள் தகவலை திருடுவது சாத்தியமில்லை. இந்த வசதி  ஏப்ரல் 1, 2026 அன்று முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. அதுவரை ஓடிபி முறையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க : பொதுமக்கள் இரண்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும்?.. ஏன்?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது இதுதான்

இது செயல்படுத்தப்படும் நாள் ஏப்ரல் 1, 2026. அதாவது இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை தற்போதைய OTP அடிப்படையிலான முறையே தொடரும். இந்த புதியமுறை போன் தொலைந்துபோனாலோ, அல்லது திருடுபோனாலோ உங்கள் பணத்தை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். இதற்கு பயனர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.