RBI ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ஹோம் லோனில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

Impact on Loans & Savings: ரெப்போ விகிதம் குறைந்தால், வங்கிகள் கடன்களுக்கு விதிக்கும் வட்டி விகிதத்தையும் குறைக்க வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக, வீட்டுக்கடன் வாங்கியவர்கள் மாதம் மாதம் செலுத்தும் EMI தொகை குறைய வாய்ப்புள்ளது. இந்த கட்டுரையில் ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ள நிலையில் அது ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பார்க்கலாம்.

RBI ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ஹோம் லோனில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

08 Jun 2025 22:17 PM

 IST

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எதிர்பாராத முறையில் ரெப்போ விகிதத்தை 50 புள்ளிகள் (BPS) குறைத்து 5.50 சதவிகிதமாக அறிவித்துள்ளது. இது ஹோம் லோன் வைத்திருப்பவர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கலாம் என்றும், ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit – FD) வருவாயில் அதிகரிக்கக் கூடும் எனவும் நிபுணர்கள் அறிவித்திருக்கின்றனர்.  ரிசர்வ் வங்கி இந்த வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்திருக்கும் நிலையில், வங்கிகள் அதை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அமல்படுத்தும் பட்சத்தில் புதிதாக ஹோம் லோன் வாங்குபவர்களுக்கு மாதத் தவணை குறையும்.  உதாரணமாக ரூ.50 லட்சம் மதிப்பில் 20 வருடங்களுக்கு ஹோம் லோன் வாங்கியிருப்பவருக்கு ரூ.1,960 வரை குறையலாம் என நிபுணர்கள் கணிக்கிறார்கள்.

இது குறித்து Goel Ganga Developments நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அன்னுஜ் கோயல் கூறுகையில், “ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் குறைத்திருப்பது மிக சிறந்த முடிவு.  இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பை அதிகரிக்கும்.   இது மாதம் ரூ. 1,960 என்ற அளவில் மொத்தமாக 20 வருடங்களில் ரூ.4.7 லட்சம் வரை சேமிக்க உதவும் என்றார்.

ஹோம் லோன் பெற்றவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

 

அதேபோல் ரூ.30 லட்சம் மதிப்பில் 20 வருட வீட்டு கடன் எடுத்தவர்கள் ரூ.1,176 வரை மாதத் தவணை குறையலாம் என்றார். வங்கிகள் மாதத் தவணையைக் குறைக்கலாம் அல்லது. தற்போது உள்ள மாதத் தவணையை தொடர்வதன் மூலம் எதிர்காலத்தில் மாதத் தவணைக்கான காலத்தை குறைக்கலாம்.

பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பு?

பிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு இது சிறிய மனஅழுத்தத்தை உருவாக்கக்கூடும். வங்கிகள் ரெப்போ விகிதத்தை வாடிக்கைாளர்களுக்கு செயல்படுத்தினால், பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்கள் குறையலாம். வட்டி விகிதங்கள் குறையும் முன் தற்போது உள்ள விகிதத்தில் முதலீடு செய்பவர்கள் உடனடியாக செய்து கொள்வது நல்லது. பின்னர் வங்கிகள் வட்டியைக் குறைத்தால் அது நம் முதலீட்டை பாதிக்கும். அதனால் இப்பொழுதே முதலீடு செய்தால் பின்னர் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்தாலும் அது நமது முதலீட்டை பாதிக்காது. ஒருவேளை வட்டி விகிதங்கள் குறைந்தால், அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் போன்ற மாற்று சேமிப்பு வாய்ப்புகளையும் மக்கள் பரிசீலிக்கலாம்.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் இந்த வட்டி விகிதக் குறைப்பு, வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கலாம். EMI குறைதல் மூலம் நீண்டகால வருமான சேமிப்பும், எதிர்கால திட்டங்களை மேற்கொள்வதற்கும் இது உதவும். இருப்பினும், FD முதலீட்டாளர்கள் தங்களது முடிவுகளை சிக்கனமாக எடுப்பது அவசியம்.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..