இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எச்டிஎஃப்சி வங்கியிலும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்திலும் ஒழுங்குமுறை விதிகள் மீறப்பட்டதாக குற்றம்சாட்டி அபராதம் விதித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டுத் தொடர்பான விதிமுறைகளை மீறி ஒரு வாடிக்கையாளருக்கு டெர்ம் லோன் வழங்கியதற்காக, எச்டிஎஃப்சி (HDFC) வங்கிக்கு ரூ.4.88 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கிக்கு சரியான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், வங்கி எழுத்துப்பூர்வமாக பதிலளித்ததுடன், வாய்மொழியாகவும் விளக்கம் அளித்தது. இதனை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, விதிமுறை மீறல் உறுதியாக இருப்பதாகத் தீர்மானித்து அபராதம் விதித்துள்ளது.
ஸ்ரீராம் ஃபைனான்ஸுக்கு ரூ.2.70 லட்சம் அபராதம்
இதேபோல், 2025-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் கடன் வழிகாட்டு விதிகள்” என்பதை முறையாகக் கடைப்பிடிக்காததால், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கும் ரூ.2.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 மார்ச் 31 தேதியுடன் நிறைவடைந்த நிதிநிலை அடிப்படையில் ஆர்பிஐ நடத்திய ஆய்வில், கடன் தொகைகளை நேரடியாக கடனாளிகளிடமிருந்து பெற வேண்டிய நிலைமையில், மூன்றாம் நபரின் வங்கிக் கணக்கில் தவறாக செலுத்தியதாகக் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக ஸ்ரீராம் ஃபைனான்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், நிறுவனம் எழுத்துப் பதிலும், வாய்மொழி விளக்கங்களும் அளித்தது. அனைத்தையும் பரிசீலித்த பிறகு, நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : வீட்டு கடன் வைத்துள்ளவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ வட்டி விகிதம் குறித்து வெளியான முக்கிய தகவல்!
இந்திய ரிசர்வ் வங்கி என்பது நாட்டின் நிதி ஒழுங்கை பாதுகாக்கும் முக்கிய அமைப்பு. அதனால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டால், அபராதம் விதிக்கப்படுகிறது. இது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முறையாக செயல்படுவதை அனுமதிக்கிறது.
இதையும் படிக்க: செயலிழந்த வங்கி கணக்குகளை புதுப்பிக்க வேண்டுமா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுகள் இதோ!
ஆர்பிஐ அபராதம் விதிப்பதற்கான காரணங்கள்
- வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு உரிய பதில் அளிக்காவிட்டாலும் அபராதம் விதிக்கப்படலாம்.
- அதே போல கூடுதல் வட்டி வசூலிக்கப்பட்டாலும் அபராதம் விதிக்கப்படலாம்.
- வங்கிகள் நிதி நிறுவனங்கள் சட்டத்துக்கு புறம்பாக பணப்பரிமாற்றம் செய்தால் அபராதம் விதிக்கப்படலாம்.
- வாடிக்கையாளரின் விவரங்கள் சரியாக இல்லை என்றாலும் அபராதம் விதிக்கப்படலாம்.
- வெளிநாடுகளில் முதலீடு செய்யும்போதோ, அல்லது பெறும்போதோ விதிகளை சரியாக கடைபிடிக்கவில்லை என்றாலும் அபராதம் விதிக்கப்படலாம்.
- டிஜிட்டல் லோன் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படலாம். குறிப்பாக வாடிக்கையாளரின் பணத்தை நேரடியாக பெறாமல் வேறு வங்கி கணக்கில் அனுப்ப சொன்னால் அது தவறாக கருதி அபராதம் விதிக்கும்.
- வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு உரிய பதில் அளிக்காவிட்டாலம் அபராதம் விதிக்கப்படலாம். அதே போல கூடுதல் வட்டி வசூலிக்கப்பட்டாலும் அபராதம் விதிக்கப்படலாம்.
- இரு நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதங்கள், வாடிக்கையாளர்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் அல்லது பரிவர்த்தனைகளின் சட்டபூர்வ தன்மையைப் பாதிக்காதவையாகவே இருப்பதாக ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது. மொத்தத்தில், ஒழுங்குமுறை மீறல்களுக்கு எதிராக ஆர்பிஐ கடுமையான நடவடிக்கை எடுக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.