தனிநபர் கடன்கள்.. இந்தியாவின் டாப் 5 வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் இவை தான்!

Top 5 Banks and Rates in India | இந்தியாவில் உள்ள பல்வேறு வக்கிகள் தனிநபர் கடன் வழங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவின் டாப் 5 வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன்களுக்கான வட்டி மற்றும் பிராசசிங் கட்டணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தனிநபர் கடன்கள்.. இந்தியாவின் டாப் 5 வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் இவை தான்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Dec 2025 12:07 PM

 IST

பெரும்பாலான நபர்கள் தங்களுக்கு பண தேவை ஏற்படும்போது வங்கிகளின் கடன் பெற முயற்சி செய்கின்றனர். பொதுமக்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக வங்கிகள் தனிநபர் கடன்களை (Personal Loan) வழங்குகின்றன. ஆனால், இந்த தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு விதமான வட்டி விகிதத்தை கடைபிடிக்கும். இந்த நிலையில், குறைந்த வட்டி கொண்ட கடனை வாங்குவதன் மூலம் திருப்பி செலுத்தும் தொகையை குறைக்க முடியும். இந்த நிலையில், இந்தியாவில் உள்ள சில டாப் 5 வங்கிகளின் வட்டி விகிதங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) தனிநபர் கடன்களுக்கு 10.45 சதவீதம் முதல் 16.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த வங்கி 2 சதவீதம் பிராசசிங் கட்டணம் (Processing Fees) வசூலிக்கிறது. இதுதவிர வருமானம், கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடன் தொகை ஆகியவற்றை பொறுத்து இறுதி வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.

இதையும் படிங்க : அதிரடியாக விலை குறைந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்!

கோடக் மஹிந்திரா வங்கி

கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) தனிநபர் கடன்களுக்கு 10.99 சதவீதம் மற்றும் அதற்கும் மேல் வட்டி வழங்குகிறது. கடன் தொகையில் 5 சதவீதம் பிராசசிங் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடன் தொகை வங்கி கணக்கிற்கு வரும் போது இந்த தொகை பிடித்தம் செய்யப்படும்.

எஸ்பிஐ வங்கி

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI – State Bank of India) தனிநபர் கடனுக்கு 10.05 சதவீதம் முதல் 15.05 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. பெரும்பாலான மாத வறுமானம் பெறும் நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக உள்ளது.

இதையும் படிங்க : Credit Card : கிரெடிட் கார்டு மோசடி நடைபெற்றால் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷ்யங்கள் இதுதான்!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) தனிநபர் கடன்களுக்கு 10.75 சதவீதம் முதல் 14.45 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற விரும்பும் நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி
முதல்நாளே வசூலை குவித்த ‘தேரே இஷ்க் மே’.. இந்தியில் சாம்ராஜ்யம் படைக்கும் தனுஷ்!!