முதல் முறை கடன் வாங்குபவர்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை.. சூப்பர் தகவலை சொன்ன மத்திய அரசு!
CIBIL Score Important Announcement | வங்கிகளில் கடன் வாங்க வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் கட்டாயமாக உள்ளது. இதனால் பலரால் கடன் வாங்க முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில், முதல் முறை கடன் வாங்கும் நபர்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்திய வங்கிகளில் முதன் முறை கடன் பெறும் நபர்களுக்கு சிபில் ஸ்கோர் (Cibil Score) கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு (Central Government) தெரிவித்துள்ளது. பெரும்பாலான நேரங்களில் முதல் முறை கடன் வாங்க முயற்சி செய்யும் நபர்களின் விண்ணப்பங்கள் சிபில் ஸ்கோர் காரணமாக நிராகரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சிபில் ஸ்கோர் குறித்து விளக்கம் அளித்துள்ள நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில் சிபில் ஸ்கோர் குறித்து அவர் கூறியுள்ளது என்ன என விரிவாக பார்க்கலாம்.
கடன் வாங்க முக்கிய அம்சமாக உள்ள சிபில் ஸ்கோர்
இந்தியாவை பொருத்தவரை வாகன கடன், தனிநபர் கடன், வீட்டு கடன் என எது வாங்க வேண்டும் என்றாலும், அதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயமாக உள்ளது. வங்கிகளில் கடன் வாங்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவு சிபில் ஸ்கோர் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அந்த குறிப்பிட்ட நபரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இதனால் பலர் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க முடியாமல் உள்ளனர். முதல் முறை கடன் வாங்கும் நபர்களின் விண்ணப்பங்களும் சிபில் ஸ்கோரை கணக்கு காட்டி நிராகரிக்கப்படும் நிலையில், அது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இதையும் படிங்க : பெர்சனல் லோனுக்காக அளிக்கும் தகவல்களை வைத்து நடக்கும் மோசடி – தவிர்ப்பது எப்படி?
சிபில் ஸ்கோர் குறித்து விளக்கம் அளித்த நிதித்துறை இணை அமைச்சர்
இது குறித்த விளக்கம் அளித்துள்ள நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி , கடன் நிறுவனங்களின் சிறப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல என ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் வாங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதே போல கடன் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோரை வங்கி அறிவிக்கவும் இல்லை. ஒழுங்கு படுத்தாத கடன் சூழலில் கடன் வாங்குபவர்கள் தான் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் பரந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதலின் அடிப்படையில் தங்கள் கடன் முடிவுகளை எடுக்கிறார்கள்.
இதையும் படிங்க : ஏடிஎம் பண பரிவர்த்தனை.. கூடுதல் கட்டணங்களை தவிர்ப்பது எப்படி?.. ஆர்பிஐ கூறும் முக்கிய விதிகள்!
முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்றாலும் அவர்களது நடத்தை, பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும். அந்த வகையில் அவர்களின் கடன் வரலாறு, கடந்த கால திருப்பி செலுத்தும் வரலாறு, தாமதமான திருப்பி செலுத்துதல், தீர்க்கப்பட்ட கடன்கள் மறுசீரமைக்கப்பட்டவை மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டவை போன்றவற்றை சரி பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.