அவசரமாக பணம் தேவைப்படுகிறதா? காருக்கு கடன் வழங்கும் வங்கிகள்!
Loan against car : அவசர நிதி தேவைக்கு உங்கள் காரை அடமானமாக வைத்து கடன் பெறலாம். சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 10–12 ஆண்டுகள் பழைய கார்களுக்கே கூட கடன் வழங்குகின்றன. கார்களை வைத்து கடன் பெறும்போது, வட்டி விகிதம் 11% முதல் 18% வரை இருக்கும்.

மாதிரி புகைப்பம்
அவசர காலங்களில் பணம் தேவைப்பட்டால் நம்மிடம் உள்ள வீடு, நிலம், நகை போன்றவற்றை வைத்து வங்கிகளில் கடன் பெறுவது வழக்கம். இதுபோன்ற சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு கடன் கிடைப்பது மிகவும் சவாலானது. பெர்சனல் லோனும் உங்களுக்கு உடனடியாக கிடைக்காது. அது போன்ற நேரங்களில் உங்களிடம் கார் இருந்தால் காரை அடமானமாக வைத்து கடன் பெறலாம். இது போன்ற நேரங்களில் காரும் உங்கள் சொத்தாக கருதப்படும். சில பொதுத்துறை வங்கிகள் தனியார் நிதி நிறுவனங்கள் கார்களுக்கு கடன் வழங்குகின்றன. கார்களின் நிலைக்கு ஏற்ப கடன் தொகை நமக்கு கிடைக்கும். வீடு போன்றவற்றை வைத்து கடன் பெறுவதைக் காட்டிலும் காரை வைத்து கடன் வாங்கும்போது கிடைக்கும் தொகை சற்று குறைவாகவே இருக்கும். இந்த கட்டுரையில் கார்களை அடமானமாக வைத்து கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் அதன் வட்டி விகிதங்கள் குறித்து பெறலாம்.
காருக்கு கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்
ஆக்ஸிஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க, பஜாஜ் ஃபின்செர்வ் போன்ற பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் காரை அடமானமாக பெற்றுக்கொண்டு கடன் வழங்குகின்றன. உங்கள் கார் 10 முதல் 12 ஆண்டுகள் பழையது என்றாலும் கடன் கிடைக்கும். சில வங்கிகள் காரின் மதிப்பை விட அதிகம் கடன் வழங்குகின்றன. என்பது குறிப்பிடத்தக்குத.
அடமானம் வைத்த பிறகு காரை பயன்படுத்த முடியுமா?
தங்கத்தை வைத்து கடன் பெறும்போது அதனை வங்கியில் ஒப்படைக்க வேண்டியிருக்கும். ஆனால் காரை வைத்து கடன் பெறும்போது, உங்கள் காரை தொடர்ந்து பயன்படுத்தலாம். வங்கியில் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் கடன் பெறுவதற்கு முன் உங்கள் கிரெடிட் ஸ்கோர், ஆவணங்கள், வங்கி கொள்கைகளை பொறுத்து மாறுபடும். சில வங்கிகள் நீங்கள் ஏற்கனவே காரை வைத்து கடன் வாங்கியிருந்தாலும் மேற்கொண்டு கடன் வழங்குகின்றன. ஆனால் அதற்கு முதலில் பெற்ற கடனுக்கு குறைந்தது 12 மாதங்கள் மாதத் தவணை கட்டியிருக்க வேண்டும்.
கடனுக்கான வட்டி, கட்டணங்கள் மற்றும் அபராதங்கள்
காருக்கான வட்டி விகிதம் 11 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை இருக்கும். கடன் பெற பிராசசிங் கட்டணம் வங்கிகளைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக ஆக்ஸிஸ் வங்கி மற்றும் பஜாஜ் ஃபின்செர்வ் ஆகியவற்றில் கடன் பெற செயலாக்க கட்டணம் கடன் தொகையில் 1 சதவிகிதமாக இருக்கும். அதுவே டாடா கேப்பிடல்ஸில் கடன் தொகையில் இருந்து 1.25 சதவிகிதமாக இருக்கும். எச்டிஎஃப்சி வங்கியைப் பொறுத்தவரை ரூ.3,000 முதல் ரூ.9,000 வரை இருக்கும்.
அது போல கடனை முன் கூட்டியே திருப்பி செலுத்துகிறீர்கள் என்றால் 3 சதவிகிதம் முதல் 6 சதவிகிதம் வரை விலக்கு அளிக்கின்றன. சில வங்கிகள் கடன் பெற்று 12 அல்லது 24 மாதங்கள் கடந்த பிறகு இதற்கு விலக்கு அளிக்கின்றன.
முக்கியமான விதிமுறைகள்
-
காரை விற்பனை செய்ய முடியாது. கடன் முழுவதும் அடைத்த பிறகே உங்களுக்கு காரை விற்க அனுமதிக்கப்படும்.
-
காரின் இன்சூரன்ஸ் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
-
மாதத்தவணை கட்டத் தவறினால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.
-
60 முதல் 90 நாட்கள் முறையாக கட்டணம் செலுத்தாமல் இருந்தால், அதற்காக வங்கி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், காரை வங்கிகள் பெற்றுக்கொள்ளலாம்.