வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் என்ன நடக்கும் தெரியுமா?

Minimum Balance Rules: சமீபத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் மினிமம் பேலன்ஸ் ரூ.50,000 இருக்க வேண்டும் என நிர்ணயித்தது. இது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் மினிமம் பேலன்ஸ் என்பது என்ன அது இல்லையென்றால் என்ன நடக்கும் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் என்ன நடக்கும் தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

19 Aug 2025 16:45 PM

ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு குறிப்பிட்ட சில விதிமுறைகள் இருக்கும். அதாவது குறைந்தபட்ச இருப்பு தொகை, வட்டி, கிரெடிட் கார்டு (Credit Card), டெபிட் கார்டு விதிமுறைகள் என ஒன்றுக்கு ஒன்று வேறுபடும். அதில் ஒன்று தான் குறைந்தபட்ச இருப்புத் தொகை என்ற மினிமம் பேலன்ஸ் விதி. இதன் அளவு வங்கிக்கு வங்கி மாறும். சமீபத்தில் கூட ஐசிஐசிஐ (ICICI) வங்கி தங்களது மாநகர் பகுதிகளில் மினமம் பேலன்ஸ் ரூ.50,000 இருக்க வேண்டும் என அறிவித்திருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில் அதனை மாற்றியது. அதே பல கடந்த சில மாதங்களுக்கு கனரா வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த வகையில் இந்த கட்டுரையில் மினிமம் பேலன்ஸ் விதி என்பது என்ன? நம் கணக்கில் மினிமம் பேலன்ஸ் அளவுக்கு குறைவாக இருந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வங்கியில் குறைந்தபட்ச மாத சராசரி இருப்பு (Minimum Average Balance) என்ற விதியை வாடிக்கையாளர்களுக்கு வைத்திருக்கிறது. வங்கிகள் தங்களது சேவைகளை வழங்குவதற்காகவும், செலவுகளை சமாளிக்கவும் இந்த விதியை அமல்படுத்துகின்றனர்.  அதன் படி குறைந்தபட் இருப்பு தொகை இல்லையெனில் அதற்காக வங்கி நமக்கு அபராதம் விதிக்கலாம். இந்த அபராதம் எவ்வளவு நாள் நம் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லையோ அதற்கு ஏற்ப மாறுபடும்.

 இதையும் படிக்க : யுபிஐ-ல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

ஐசிஐசிஐ வங்கியின் மினிமம் பேலன்ஸ் சர்ச்சை

சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி புதிய சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச மாத இருப்புத் தொகை விதியை மாற்றியது. அதன் படி, ஆகஸ்ட் 1, 2025 அன்றுக்கு பிறகு மாநகராட்சிகளில் துவங்கப்படும் வங்கி கணக்குக்கு மினிமம் பேலன்ஸை ரூ.50, 0000 என நிர்ணயித்தது. ஆனால் இதற்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ. 15,000 ஆக குறைத்தது. இதனால் வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் விதி பேசுபொருளாகியுள்ளது.

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் ஏற்படும் விளைவுகள்

அபராதம் வசூலிக்கப்படும்

வங்கி நிர்ணயித்த அளவை விட குறைவான அளவு பேலன்ஸ் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். இது வங்கிளை பொறுத்து ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியிருக்கலாம். இது கால அளவை பொறுத்து மாறுபடலாம். இது நம் வங்கி சேவைகளை பாதிக்கலாம்.

சேவைகளில் கட்டுப்பாடு

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லையென்றால் நமக்கு கிடைக்கும் சலுகைகள் நிறுத்தப்படலாம். உதாரணமாக நமக்கு வழங்கும் செக் புக், டிமாண்ட் டிராஃப்ட் மற்றும் டெபிட் கார்டு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.

இதையும் படிக்க : யுபிஐ-ல் பயோமெட்ரிக் மூலம் பண பரிவர்த்தனை?.. விரைவில் அமலுக்கு வரும் புதிய அம்சம்?

கணக்கு முடக்கப்படலாம்

நீண்ட காலமாக மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காத வைத்திருக்காத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படாலம். இப்படி முடக்கப்பட்ட கணக்கை மீண்டும் இயக்க அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

அபராதத்தை தவிர்க்கும் வழிகள்

  • நம் வங்கிக் கணக்கை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். வங்கிகள் நம் கணக்கு தொடர்பான விவரங்களை எஸ்எம்எஸ் வழியாகவும் ஆப் வழியாகவும் வழங்குகின்றன.
  • ஊதியம் உள்ளிட்ட தற்காலிக காரணங்களுக்காக வங்கி கணக்கு தொடங்கப்பட்டால், தொடர விருப்பம் இல்லாதபட்சத்தில், கணக்கை குளோஸ் செய்யலாம்.
  • மற்றொரு கணக்கில் இருந்து மாதம் ஒரு சிறிய தொகை செலுத்தும் முறையை உருவாக்கலாம்.
  • அதே போல உங்கள் வங்கி எந்தப் பகுதியில் உள்ளது. அதன் மினிமம் பேலன்ஸ் விதி என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வது நல்லது.