வேலையில் இருந்து விலக போறீங்களா? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க

New Labour Codes Rules: இந்தியாவில் தொழிலாளர் சட்டத்தில் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அதன் படி இனி வேலையில் இருந்து விலகும் ஊழியர்களுக்கு நிறுவனம் இறுதியாக வழங்கும் தொகையில் இருந்து முக்கிய மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வேலையில் இருந்து விலக போறீங்களா? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Apr 2026 17:59 PM

 IST

இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததன் மூலம், ஊழியர்களுக்கான முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு வேலையில் இருந்து விலகும் ஊழியர்களுக்கு இறுதியில் செலுத்தப்படும் முழு தொகை வழங்கும் நடைமுறையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஊதிய குறியீடு 2019ன் கீழ், இனி ஊழியர்கள் வேலைவிட்டு விலகிய பிறகு, அவர்களுக்கான அனைத்து நிலுவைத் தொகைகளும் 2 வேலை நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2026 ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.

வேலையில் இருந்து விலகும் ஊழியர்கள் தெரிந்திருக்க வேண்டியவை

முன்னதாக, ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்த பிறகு அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, சம்பளம் மற்றும் பிற தொகைகளைப் பெற பல வாரங்கள் அல்லது சில சமயங்களில் 90 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் நிதி சிக்கல்களால் ஊழியர்கள் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த புதிய விதி அந்த பிரச்னையை தீர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : வெறும் ரூ.50 முதலே முதலீடு செய்யலாம்.. இந்த திட்டங்களை நோட் பண்ணுங்க!

இறுதியாக வழங்கப்படும் முழு தொகை என்பது ஒரு ஊழியர் தனது பணியில் இருந்து விலகும்போது அவருக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து தொகையையும் கணக்கிட்டு வழங்கும் செயல்முறை ஆகும். இதில் வேலையை விட்டு விலகுபவர்கள் அல்லது பணி நீக்கம் செய்யப்படுபவர்தள் அல்லது பணிியில் இருக்கும் போது திடீர் மரணம் போன்ற அனைத்து நிலைகளும் அடங்கும். இறுதியாக வழங்கப்படும் முழு தொகையை கணக்கீடும் முறையில் பல முக்கிய அம்சங்கள் உள்ளன. உதாரணமாக நிறுவனத்தில் கடைசியாக வழங்கப்படும் சம்பளம் அந்த நிறுவனத்தில் கடைசி மாதத்தில் அந்த ஊழியர் வேலை பார்த்த நாட்களை கணக்கிட்டு வழங்கப்படும். மேலும் அதற்கான ஹெச்ஆர்ஏ போன்ற அலவன்ஸ்களும் அடங்கும்.

இதையும் படிக்க : வீட்டுக்கடனுக்கு வட்டியை தவிர்க்க வேண்டுமா? கைகொடுக்கும் SIP முதலீடு – எப்படி தெரியுமா?

மேலும் அந்த அந்த வருடத்தில் எடுக்காத விடுமுறைகளுக்கும் சேர்த்து பணமாக வழங்கப்படும். போனஸ், ஊக்கத்தொகை, பண நிறைவுக்காக வழங்கப்படும் பணம் ஆகியவைம் இறுதி சம்பளத்தில் வழங்கப்படும். அதே நேரம் வரி, கடன், முன்பணம, லேப்டாப் போன்ற நிறுவனத்தின் பொருட்களை திருப்பி வழங்காதது போன்ற காரணங்களுக்காக பணம் பிடித்தம் செய்யப்படால். மொத்தத்தில் புதிய தொழிலாளர் சட்டத்தின் படி ஊழியர்கள் வேலையை விட்டு விலகும் போது தங்களுக்கான பணத்தை விரைவாக பெற வாய்ப்பு உருவாகியுள்ளது. இது ஊழியர்களுக்கான சுதந்திரத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்