30 வயதுக்குள் தெரிந்துக்கொள்ள வேண்டிய பொருளாதார பாடங்கள்.. 7 முக்கிய டிப்ஸ்!

7 Crucial Financial Lessons | மனிதர்கள் தங்களது வாழ்வில் பொருளாதாரத்தை உருவாக்குவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு அவர்களை அதனை பாதுகாப்பாக வைத்திருப்பதும் இன்றியமையாதது ஆகும். இந்த நிலையில், 30 வயதுக்குள் ஒருவர் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய பொருளாதார பாடங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

30 வயதுக்குள் தெரிந்துக்கொள்ள வேண்டிய பொருளாதார பாடங்கள்.. 7 முக்கிய டிப்ஸ்!

மாதிரி புகைப்படம்

Published: 

01 Jul 2025 12:48 PM

மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நிதி பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதியை சேமிப்பதை விட அதனை எவ்வாறு முறையாக கையாள்வது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில், அன்றாட வாழ்வில் செய்யும் சில பொருளாதார தவறுகளை சரிசெய்துக்கொள்வதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிலையில், ஒருவர் தனது 30 வயதுக்குள் பொருளாதாரம் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய 7 பாடங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

30 வயதுக்குள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 7 பொருளாதார பாடங்கள்

ஒருவர் 30 வயதை அடைவதற்கு முன்னதாக சில பொருளாதார தவறுகளை சரிசெய்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சிஏ நிதின் கவுஷிக் தெரிவித்துள்ளார்.

நிதின் கவுஷிக் எக்ஸ் பதிவு

தரமற்ற மின்சாதன பொருட்கள்

விலை குறைவாக உள்ளது என தரமற்ற மின்சாதன பொருட்களை வாங்குவது உங்களுக்கு மேலும் மேலும் செலவை அதிகரிக்கும். எனவே தரமான மின்சாதன பொருட்களை வாங்குவது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

கனமான வீட்டு உபயோக பொருட்கள்

நீங்கள் வாடகை வீட்டில் இருக்கிறீர்கள் என்றால் கனமான மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை வாங்காதீர்கள். நீங்கள் வீடு மாறும் பட்சத்தில் உங்களுக்கு அவை அதிக செலவை ஏற்படுத்திவிடும்.

5 சதவீதம் சேமிப்பு

உங்களின் மாத வருமானத்தில் இருந்து குறைந்தது 5 சதவீதத்தை பணமாக சேமிக்க வேண்டும். காரணம், நீங்கள் கையில் பணமாக வைத்திருக்கும்போது அதனை செலவு செய்வதற்கு யோசனை செய்வீர்கள்.

விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

உங்கள் சேமிப்பை விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் வாங்குவதில் பயன்படுத்தாதீர்கள். அது உங்களது சேமிப்பு முழுவதையும் தீர்த்துவிடும். அதற்கு மாறாக தேவைக்கு ஏற்ப விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

ஹெல்த் இன்சூரன்ஸ்

உங்களின் 6 மாத சம்பளம் ஒரு மருத்துவ சேவைக்கான கட்டணமாக மாறிவிடும். எனவே ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்வது நிதி சிக்கலில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்.

சர்க்கரை மற்றும் பாம் ஆயிலை தவிருங்கள்

சர்ரக்கரை மற்றும் பாம் ஆயிலை தவிருங்கள். அவை உங்கள் பணத்தை மட்டுமல்ல பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

கிரெடிட் கார்டு கட்டுப்பாடு

கிரெடிட் கார்டுகளை உங்களது தேவைகளுக்காக பயன்படுத்துங்கள். அதிக அளவு கிரெடிட் கார்டு பயன்படுத்துவது, தேவையற்ற நிதி சிக்கல்களில் சிக்க வைத்துவிடும்.