Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி நீட்டிப்பு?.. வருமான வரித்துறை திட்டவட்ட மறுப்பு!

Income Tax For 2024 - 2025 | 2024 - 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வளைத்தளங்களில் தகவல் வெளியாகி வரும் நிலையில், வருமான வரித்துறை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி நீட்டிப்பு?.. வருமான வரித்துறை திட்டவட்ட மறுப்பு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 Sep 2025 10:24 AM

 IST

இந்தியாவில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் (Income Tax Filing) செய்ய இன்று (செப்டம்பர் 15, 2025) தான் கடைசி தேதி என்று வருமான வரித்துறை (Income Tax Department) அறிவித்திருந்தது. ஆனால், வருமான வரித்துறை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடைசி நேரத்தில் நீட்டிக்கப்படும் என பலரும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தான் வருமான வரி தாக்கல் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்

இந்திய குடிமக்கள் தங்களது வருமான வரம்புகளுக்கு ஏற்ப வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி இந்த ஆண்டு அதாவது 2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15, 2025 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பலரும் தங்களது வருமான வரியை தாக்கல் செய்தனர். ஆனால், சிலர் கடைசி நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தான், வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : ITR Filing : கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாமா?.. வல்லுநர்கள் கூறுவது என்ன?

வருமான வரி காலக்கெடு நீட்டிப்பு கிடையாது – வருமான வரித்துறை திட்டவட்டம்

இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வளைத்தளங்களில் வெளியாகும் போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வளைத்தளங்களில் வெளியாகும் அந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும், அதனை நம்பி தாமதாமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது. அதன்படி, வருமான வரி தாக்கல் செய்ய இன்றே (செப்டம்பர் 15, 2025) கடைசி நாள் என்பது உறுதியாகி உள்ளது.

இதையும் படிங்க : போன் மூலம் நடக்கும் கிரெடிட் கார்டு மோசடிகள் – பாதுகாப்பாக இருப்பது எப்படி?

வருமான வரித்துறை கடைசி தேதிக்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்யும் பட்சத்தில் கூடுதல் அபராத கட்டணங்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே கடைசி தேதிக்குள் வருமான வரியை செலுத்துவது சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.