PPF, SSY திட்டங்களில் முதலீடு செய்கிறீர்களா?.. மார்ச் 31-க்குள் இதையெல்லாம் செய்யவில்லை என்றால் சிக்கல்!
PPF and SSY Scheme | பொதுமக்களின் நலனுக்கான செயல்படுத்தப்படும் பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகிய திட்டங்களில் முதலீடு செய்வர்கள் மார்ச் 31, 2026-க்கு இவற்றை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இல்லை என்றால் அவர்களதுன் கணக்கு முடக்கப்படும் அபாயம் உள்ளது.

மாதிரி புகைப்படம்
எதிர்காலத்தை பாதுகாப்பாக மாற்ற வேண்டும் என்றால் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) மிகவும் அவசியமானதாக உள்ளது. அதிலும் பல பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றும் வகையில் சில திட்டங்களில் முதலீடு செய்வர். அவ்வாறு எதிர்காலத்தை பாதுகாக்கக்கூடிய திட்டங்கள் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF – Public Provident Fund) ஆகிய திட்டங்கள். இந்த திட்டங்களில் முதலீடு செய்துள்ள நபர்கள் 2026, மார்ச் மாத இறுதிக்குள் சில விஷயங்களை செய்யவில்லை என்றால் அவர்களது கணக்குகள் முடக்கப்படும் அபாயம் உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மார்ச் 31, 2026-க்கு இவற்றை கடடாயம் செய்ய வேண்டும்
மார்ச் 31, 2026-க்குள் இந்த திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் தங்களது கணக்குகளில் சில முக்கியமான ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அவ்வாறு அவர்கள் ஆவணங்களை சரிபார்க்க தவறினால் கணக்குகள் தானாகவே மூடப்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், மார்ச் 31-க்கு எந்த எந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும், என்ன செய்வதன் மூலம் உங்கள் கணக்குகள் பாதுகாப்பாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : உங்களிடம் ரூ.2000 நோட்டுகள் இருக்கா? ஈஸியா மாத்தலாம் – ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு
என்ன என்ன செய்ய வேண்டும்?
- 2025 – 2026 ஆம் நிதியாண்டு மார்ச் 31, 2026 உடன் முடிவடைய உள்ளது. எனவே நீங்கள் கட்ட வேண்டிய குறைந்தபட்ச தொகையை இன்னும் செலுத்தவில்லை என்றால் மார்ச் 31, 2026-க்குள் செலுத்தி முடிக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.
- இந்த திட்டத்தின் முக்கிய விதிகளில் ஒன்றுதான் ஆண்டு குறைந்தபட்ச தொகை. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச தொகையை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
- ஒருவேளை நீங்கள் அந்த ஆண்டுக்கான குறைந்தபட்ச தொகையை செலுத்தவில்லை என்றால் உங்கள் கணக்கு செயலற்றதாக மாறிவிடும். இந்த நிலையில், கணக்கை மீண்டும் செயல்பட வைக்க அந்த ஆண்டுக்கான குறைந்தபட்ச தொகை மற்றும் அதற்கான அபராதம் ஆகியவற்றை சேர்த்து வழங்க வேண்டும்.
இதையும் படிங்க : 2026-ல் இபிஎஃப்ஓ வட்டி விகிதம் 8.25% ஆகவே தொடரும்.. காரணம் இதுதான்!
இந்த திட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் முறையாக குறைந்தபட்ச தொகை செலுத்தும் பட்சத்தில் எந்த வித சிக்கலும் இல்லாமல் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.