மார்ச் 31-க்கு எல்பிஜி கேஒய்சி.. ஸ்டிரிக்டாக சொன்ன அரசு.. ஆன்லைனில் கேஒய்சி மேற்கொள்வது எப்படி?
How To Complete e-KYC in LPG Through Online | எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், எல்பிஜி கேஸ் சிலிண்டர்களுக்கு மார்ச் 31, 2026-க்குள் இகேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) மற்றும் அமெரிக்கா (America) நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக இந்தியாவில் மிக கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக அரசு பல்வேறு முக்கிய நடைமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, கேஸ் சிலிண்டர் புக் செய்வதற்கான கால அளவை நீட்டித்துள்ளது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் தான் அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு இகேஒய்சி (KYC – Know Your Customer) செய்ய வேண்டியது கட்டாயம் என கூறியுள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டருக்கான இகேஒய்சி மேற்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேஸ் சிலிண்டருக்கு ஆதார் இகேஒய்சி மேற்கொள்வது எப்படி?
- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பிளேஸ்டோருக்கு சென்று Aadhaar FaceRD என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு நீங்கள் எந்த நிறுவனத்தின் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- பிறகு அந்த செயலியில் உங்கள் நுகர்வோர் எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
- லாக் இன் செய்து உள்ளே சென்ற பிறகு Re-eKYC அல்லது Aadhaar e-KYC என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- அங்கே ஆதார் எண்ணை பதிவிட்டு, விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு Face Scan செய்ய வேண்டும்.
- இப்போது உங்களது திரையில் Aadhaar FaceRD கேமரா தோன்றும். இந்த நிலையில், உங்களது முகத்தை அதில் ஸ்கேன் செய்ய வேண்டும். உங்கள் முகம் சரியாக ஸ்கேன் செய்யப்பட்டால் பச்சை நிறத்தில் டிக் மார்க் வரும்.
- ஸ்கேன் முடிந்ததும் உங்களது ஆதார் விவரங்கள் திரையில் தோன்றும். இதன் பிறகு இறுதியாக நீங்கள் Submit பட்டனை அழுத்தினால், உங்கள் e-KYC கோரிக்கை ஏற்கப்படும்.
இதையும் படிங்க : SIP மற்றும் STP.. எந்த திட்டத்தில் எப்போது, எப்படி முதலீடு செய்ய வேண்டும்?
மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி நீங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கான இகேஒய்சி மேற்கொள்ளும்போது ஒருசில நாட்களில் இகேஒய்சி மேற்கொள்ளப்படும். இந்த இகேஒய்சி முறையை மார்ச் 31, 2026-க்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனவே சிக்கல்களை தவிர்க்க இந்த தேதிக்குள் இகேஒய்சி முறையை முடிப்பது பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.