ரூ.500 முதலீட்டில் தொடங்கப்பட்ட தைரோகேர்… இன்று அதன் மதிப்பு பலகோடி – திரூப்பூர்காரர் வென்ற கதை!

From 500 to a Billion-Dollar Empire: இந்திய அளவில் இன்று தைரோகேர் பரிசோதனை நிலையம் இல்லாத நகரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு மக்களிடையே பிரபலமான நிறுவனம் ரூ.500 முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? திருப்பூரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த வேலுமணி துவங்கிய இந்த நிறுவனம் இன்று பல கோடி மதிப்புடைய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

ரூ.500 முதலீட்டில் தொடங்கப்பட்ட தைரோகேர்... இன்று அதன் மதிப்பு பலகோடி - திரூப்பூர்காரர் வென்ற கதை!

தைரோகேர் நிறுவனர் வேலுமணி

Updated On: 

12 Aug 2025 15:51 PM

 IST

ஏழையாக பிறப்பது நம் தவறு இல்லை. ஆனால் ஏழையாக இறப்பது நம் தவறு என்ற பில்கேட்ஸின் (Bill Gates) கருத்து மிக பிரபலம். அதற்கு ஏற்ப திருப்பூர் (Tirupur) அருகே ஒரு சாதராண கூலி தொழிலாளியின் மகனாக இருந்தவர் இன்று மிகப்பெரிய பில்லியன் டாலர் நிறுவவனத்தின் தலைவராக வென்று காட்டியிருக்கிறார். அவர் தான் தைரோகேர் (Thyrocare) நிறுவனரான டாக்டர் ஏ. வேலுமணி. இந்தியாவில் இவரது தைரோகேர் பரிசோதனை நிலையம் இல்லாத ஊர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி பிரபலமாக இருக்கும் தைரோகேர் நிறுவனத்தை இவர் வெறும் ரூ.500 முதலீட்டில் தொடங்கினார் என்றால் நம்ப முடிகிறதா? இப்படி பல ஆச்சரியங்கள் நிறை்தது வேலுமணியின் வாழ்க்கை. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் பூங்குடி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் வேலுமணி. இவரது அப்பா கூலித்தொழிலாளி. இவரது குடும்பம் தினமும் சாப்பாட்டுக்கு சிரமப்பட்ட நிலையிலும் தொடர்ந்து படித்தார். பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஎச்டி வரை தொடர்ந்து படித்த அவர், பிரபலமான பிலிப்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் நீண்ட காலம் பணியாற்றிய அவர் ஒரு நாள் வேலையை விட முடிவு செய்கிறார்.

இதையும் படிக்க : விவசாயிகளை கோடீஸ்வரராக்கிய அமுல்… பால் புரட்சிக்கு வித்திட்ட ஹீரோ – யார் இந்த வர்கீஸ் குரியன்?

500 ரூபாயில் ஆரம்பித்த ‘தைரோகேர்’

அந்தக் காலத்தில் தைராய்டு சோதனைகள் மிகவும் விலையுயர்ந்ததாக இருந்தது. ஏழைகளால் அந்த பரிசோதனைக்காக செலவழிக்க முடியவில்லை.. இந்த நிலையில் நாம் ஏன் மக்களுக்கு குறைவான விலையில் இந்த சோதனையை வழங்கக்கூடாது? என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. அது தான் தைரோகேர் என்ற நிறுவனத்தை உருவாக்க தூண்டியது. இதனையடுத்து மும்பையில் தனது வீட்டில் இருந்தே வெறும் ரூ.500 முதலீட்டில் அவர் தைரோகேர் லேப் அமைத்தார்.

இதையும் படிக்க : அருண் ஐஸ்கிரீம் டூ ஆரோக்கியா பால்…. கல்லூரி தேர்வில் தோற்றவர், வாழ்க்கையில் வென்ற கதை!

மக்களின் நன்மதிப்பை பெற்ற வேலுமணி

சொந்த லேப், சொந்த மெஷின், சொந்த முறையில் மாதிரிகளை சேகரித்து, துல்லியமான சோதனைகள் செய்த வேலுமணி, ‘மொத்தம் குறைந்த விலையில் தரமான மருத்துவ பரிசோதனைகள்’ என்ற கொள்கையால் மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தார். தற்போது தைரோகேர் ஒரு பில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான நெட்வொர்க் பாயிண்ட்கள், மிகப்பெரிய ஆய்வுக் கூடம் என இந்தியாவின் முன்னணி மருத்துவ பரிசோதனை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.

வேலுமணியின் முயற்சி இன்று இந்தியாவின் ‘ஆத்மநிர்பர் பாரத்’  அதாவது சுயநிறைவு இந்தியா கனவுக்கு ஒரு உயிருக்கொடுக்கிறது. உலகத்திற்கு இந்தியர்களும் சாதிக்கக்கூடியவர்கள் என்பதை நிரூபித்தவர் வேலுமணி. தன்னிடம் பில்லியன் ரூபாய் பணம் இல்லை,  ஆனால் பில்லியன் கனவுகள் இருந்தது என்கிற வேலுமணி, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார்.