மியூச்சுவல் ஃபண்ட்டில் 4 வருடத்தில் ரூ.1 கோடி வருமானம் பெற்ற நபர் – எப்படி நடந்தது?
Power of Mutual Funds : ஒரு முதலீட்டாளர் 4 வருடங்களில், சீராக முதலீடு செய்து ரூ.1 கோடி வரை லாபம் பெற்றதாக ரெடிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீண்ட காலத்திற்கான சரியாக திட்டமிட்டு, பண்டுகளைத் தேர்வு செய்தால், பெரிய லாபம் பார்க்க முடியும் என்பதை அவரது பதிவு நிரூபிக்கிறது. இந்த செய்தி புதிய முதலீட்டாளர்களுக்கு நல்ல உதாரணமாக அமையும்.

மாதிரி புகைப்படம்
நாம் முதலீடு செய்யத் திட்டமிடும் போதெல்லாம், நம் மனதில் தோன்றும் முதல் கேள்வி, எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதுதான். எல்லாரும் வருமானத்தை பற்றி சிந்திக்கும் அதே வேளையில் அதற்கான திட்டமிடலும் மிக அவசியம். அந்த வகையில் ஒருவர் தனது ரெடிட் பக்கத்தில், தனது மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund)போர்ட்ஃபோலியோ ரூ.1 கோடி மதிப்புடையது என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதற்காக அவர் எந்த வித குறுக்கு வழியையும் பயன்படுத்தவில்லை எனவும், இதற்காக எந்த தந்திரத்தையும் கையாளவில்லை என்கிறார். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு (Investment) செய்து சில வருடங்கள் காத்திருந்தேன் என தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ரெடிட்டில் தனது மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவைப் பகிர்ந்து அந்த நபர், 2021 ஆம் ஆண்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்கியதாக தெரிவித்திருக்கிறார். மேலும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்கியபோது, தனது போர்ட்ஃபோலியோவின் நிலையை, மீண்டும் மீண்டும் சரிபார்க்கவில்லை என்றும், 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே தனது போர்ட்ஃபோலியோவைப் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓய்வு காலத்தில் ரூ.75,000 மாத வருமானம் வேண்டுமா? சிறந்த பிபிஎஃப் திட்டம் இதோ!
முதல் 2 ஆண்டுகளில் வருமானமே இல்லை
அந்த நபர் தனது பதிவில், 2021 ஆம் ஆண்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்கியபோது, 2 ஆண்டுகளுக்கு அவரது வருமானம் பூஜ்ஜியமாக இருந்ததாகவும், அந்த நேரத்தில், தவறான திட்டத்தை தேர்ந்தெடுத்ததாக உணர்ந்தாகவும அவர் தெரிவித்தார். மேலும், பல முறை எல்லாப் பணத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வந்தது. ஆனால் இப்போது தனது மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ ரூ.1 கோடி மதிப்புடையது என்றும், அதில் ரூ.70 லட்சம் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பங்குச் சந்தையை விட அதிக வருமானம்
ஆரம்பத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து பூஜ்ஜிய வருமானம் கிடைத்தபோது, தனது பணத்தை முழுவதுமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்ததாக தெரிவித்துள்ள அவர், ஆனால் மொத்த வருவாயைப் பார்த்தால், அவர் மியூச்சுவல் ஃபண்டுகளில் 19 சதவீத வருமானத்தைப் பெற்றுள்ளார், ஆனால் இந்தக் காலகட்டத்தில் பங்குச் சந்தையில் அவருக்கு 14 சதவீத வருமானம் மட்டுமே கிடைத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: வட்டி மட்டுமே ரூ.89,989 கிடைக்கும்.. அஞ்சலகத்தின் இந்த அசத்தல் திட்டத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்!
மியூச்சுவல் ஃபண்டுகளில் எப்படி முதலீடு செய்வது?
நீங்களும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பினால், முதலில் முதலீடு செய்ய வேண்டிய நிதி திட்டம் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்.இது குறித்து அனுபவம் இல்லாதவர்கள் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து விட்டு முதலீடு செய்வது நல்லது. மேலும், ஒருவர் முழுப் பணத்தையும் ஒரே திட்டத்தில் முதலீடு செய்யக்கூடாது. இது தவிர, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்த பிறகு சரியான நேரம் வரும் வரை காத்திருப்பதும் அவசியம் என அவர் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரது பதிவில் அவர் எவ்வளவு முதலீடு செய்தார், மற்றும் முதலீடு செய்துள்ள திட்டங்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.