பால் முதல் நெய் வரை… ஜிஎஸ்டி வரி குறைப்பு – ஆவின் பால் பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு

Aavin Price Cut : ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

பால் முதல் நெய் வரை... ஜிஎஸ்டி வரி குறைப்பு  - ஆவின் பால் பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு

ஆவின் பொருட்களின் விலை குறைப்பு

Updated On: 

22 Sep 2025 15:06 PM

 IST

 ஜிஎஸ்டி (GST)வரி விகிதத்தில் மத்திய அரசு மேற்கொண்ட மாற்றத்தையடுத்து நாடு முழுவதும் பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. அதில் பால் சார்ந்த பொருட்களின் விலைகளையும் குறைத்து, தமிழக அரசின் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி விகிதம் தற்போது எளிமைப்படு்த்தப்பட்டு  5 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம் என இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்டு நாடு முழுவதும் செப்டம்பர் 22, 2025 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு உணவு பொருட்களின் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் மளிகை பொருட்களின் விலை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைந்துள்ளது.

பால் பொருட்களின் விலையை அதிரடியாக குறைத்த ஆவின்

இதே போல், பால் சார்ந்த பொருட்களின் விலையிலும் மாற்றம் செய்து, வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஆவின் நிர்வாகம் விலை குறைப்பை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : பூஸ்ட், ஹார்லிக்ஸ் முதல் ப்ரூ காபி வரை… அதிரடியாக விலை குறைப்பு – எவ்வளவு தெரியுமா?

  • அதன் படி 200 கிராம் பனீர் இனி 120 ரூபாயில் இருந்து 110 ரூபாயாக குறைந்துள்ளது.
  • அதே போல 500 கிராம் பனீரின் விலை இனி 300 ரூபாயில் இருந்தும் 275 ரூபாயாக குறைந்துள்ளது.
  • 1 லிட்டர் நெய்யின் விலை ரூ.690ல் இருந்து 650 ரூபாயாக குறையும்.
  • அதே போல 15 மில்லி யுஹெச்டி பாலின் 12 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஆவின் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு

 

  • இனி 50 மிலி நெய்யின் விலை 48 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
  • அதே போல 100 மிலி நெய்யின் விலை 85 ரூபாயில் இருந்து ரூ.80 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • அதே போல 500 மிலி நெய்யின் விலை 365 ரூபாயில் இருந்து 345 ரூபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • அதே போல ஒரு லிட்டர் நெய்யின் விலை 700 ரூபாயில் இருந்து குறைந்து 660 ரூபாயாக விற்கப்படவுள்ளது.

இதையும் படிக்க : ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் எதிரொலி.. பால் முதல் ஐஸ் கிரீம் வரை 700 பொருட்களின் விலையை அதிரடியாக குறைத்த அமுல்!

இந்த விலை குறைப்பு நடவடிக்கைகள் செப்டம்பர் 22, 2025 அன்று முதல் உடனடியாக அமலுக்கு வரவிருக்கின்றன. இந்த விலை குறைப்பு நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களின் மாத செலவு சுமையை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.