தங்கம் விலை இன்று தடாலடியாக மேலும் குறைந்தது.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold price today: அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் உச்சத்தில் இருக்கும் நிலையிலும் விலை பெருமளவில் உயரவும் இல்லை. இம்மாதம் பெரும்பாலான நாட்களில் விலை குறைந்து வருவதையும் பார்க்க முடிகிறது. போர்ச்சூழலால் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கம் மற்றும் அமெரிக்க டாலர் என இரண்டையுமே கருதுகின்றனர். தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இன்று தடாலடியாக மேலும் குறைந்தது.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை மேலும் குறைந்தது

Updated On: 

17 Mar 2026 10:35 AM

 IST

சென்னை, மார்ச் 17: வாரத்தின் முதல்நாளான நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், 2வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை முன் எப்போதும் இல்லாத புதிய உச்சங்களைத் தொட்டது. இந்த விலை உயர்வினைப் பயன்படுத்தி, பெரிய முதலீட்டாளர்கள் தங்களின் கையில் இருந்த தங்கத்தை விற்று லாபத்தை ஈட்டத் தொடங்கினர். இந்த விற்பனை அழுத்தம் காரணமாக தற்போது விலை சரிவைச் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: தங்கம் விலை 30% சரிய வாய்ப்பு.. தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி கணிப்பு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை:

அதன்படி, சென்னையில் 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,17,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையை தொடர்ந்து, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, கிராக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2.80 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்கூட்டியே கணிக்கப்பட்ட போர் சூழல்:

அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்பதால், அதன் தாக்கம் ஏற்கனவே சந்தை விலையில் பிரதிபலித்துவிட்டது. பொதுவாக போர் தொடங்கியவுடன் விலை எகிறும், ஆனால் இந்த முறை ‘சந்தை ஏற்கனவே தயாராக’ இருந்ததால் பெரிய அளவில் விலை மாற்றம் ஏற்படவில்லை.

வலுவடையும் அமெரிக்க டாலர்:

சர்வதேச சந்தையில் தங்கம் டாலர் மதிப்பிலேயே வர்த்தகம் செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்க பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை காரணமாக டாலரின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. டாலர் வலுவடையும் போது, இந்திய ரூபாய் போன்ற பிற நாணயங்களை வைத்திருப்பவர்களுக்குத் தங்கம் வாங்குவது செலவு மிகுந்ததாக மாறும். இதனால் சர்வதேச அளவில் அதன் தேவை குறைந்து விலை குறைகிறது.

இதையும் படிக்க: இந்தியர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்த தங்க ETF.. ஒரே மாதத்தில் கடுமையாக சரிந்த முதலீடுகள்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு:

போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. இது உலகளாவிய பணவீக்கத்தை அதிகரித்துள்ள போதிலும், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்காதது தங்கத்திற்குப் பாதகமாகவே முடிந்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்த்தி வைக்கத் திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்கள் வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீது முதலீடு செய்வதை விடுத்து, வங்கி டெபாசிட்கள் மற்றும் கடன் பத்திரங்கள் பக்கம் திரும்புகின்றனர். இது தங்கம் மீதான முதலீட்டு அழுத்தத்தைக் குறைத்துள்ளது.

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்