Gold Price: தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?!!

Gold Prices Surge: த ங்கத்தின் விலை என்பது உள்நாட்டுத் தேவையை மட்டும் பொறுத்தது அல்ல. மாறாக சர்வதேச பொருளாதார நிலைமைகள்: உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மந்தநிலை. அமெரிக்க டாலர் மதிப்பு: டாலரின் மதிப்பு வலுவடையும்போது தங்கம் விலை மாறுபடும்.

Gold Price: தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?!!

மாதிரிப் புகைப்படம்

Updated On: 

06 May 2026 11:17 AM

 IST

சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து நிலையற்ற தன்மையுடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலை கணிசமாகக் குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தங்கம் வாங்கும்போது பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டுமா?.. புதிய வருமான விதிகள் கூறுவது என்ன?

தங்கம் விலை உயர்வு:

சென்னையில் நேற்று தங்கம் விலையானது அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 180 குறைந்து ஒரு கிராம் 13,820 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 குறைந்து ஒரு சவரன் 1,10,560 ரூபாய்கும் விற்பனையானது. இந்நிலையில் தங்கம் விலையானது இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 230 உயர்ந்து ஒரு கிராம் 14,050 ரூபாக்கும், சவரனுக்கு 1,840 உயர்ந்து ஒரு சவரன் 1,12,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை உயர்வு

தங்கத்தை தொடர்ந்து, வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி 265க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு 5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 2,70,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை நிர்ணயத்தின் பின்னணி:

தங்கத்தின் விலை என்பது உள்நாட்டுத் தேவையை மட்டும் பொறுத்தது அல்ல. மாறாக சர்வதேச பொருளாதார நிலைமைகள்: உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மந்தநிலை. அமெரிக்க டாலர் மதிப்பு: டாலரின் மதிப்பு வலுவடையும்போது தங்கம் விலை மாறுபடும். வட்டி விகிதங்கள்: அமெரிக்க மத்திய வங்கியின் (Fed Reserve) வட்டி விகித மாற்றங்கள். புவிசார் அரசியல் பதற்றங்கள்: போர்ச் சூழல் அல்லது நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் நோக்கித் திருப்புகின்றன.

இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் முன்பதிவில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?

சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களே இந்த விலையேற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான சொத்தாகக் கருதி அதிகளவில் முதலீடு செய்வதால், வரும் நாட்களிலும் விலை இதேபோல் ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..