Gold Price Today : ரூ.82,000-த்தை நெருங்கிய தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
Gold Price Nearing 82,000 Per 8 Grams | தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே வரலாறு காணாத உயர்வை சந்தித்து வருகிறது. செப்டம்பர் 06, 2025 அன்று தங்கம் விலை ரூ.80,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், சவரன் ரூ.82,000-த்தை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
கடந்த சில நாட்களில் மட்டும் தங்கம் விலை (Gold Price) மிக கடுமையாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் தங்கம் விலை சவரன் ரூ.80,000 வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.82,000-த்தை நெருங்கியுள்ளது. இவ்வாறு தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்றைய (செப்டம்பர் 12, 2025) தங்கம் விலை நிலவரம் குறித்தி விரிவாக பார்க்கலாம்.
வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை
2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததுள்ளது. அதாவது ஒரு சவரன் தங்கம் ரூ.78,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மிக கடுமையான உயர்வை அடைந்து ரூ.80,000-த்தை தாண்டியது. அதாவது, செப்டம்பர் 05, 2025 அன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,865-க்கும் ஒரு சவரன் ரூ.78,920-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், செப்டம்பர் 06, 2025 அன்று தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் தங்கம் விலை கிரமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,005-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : Gold : தீபாவளிக்கு தங்கம் வாங்க முடியாதா?.. தங்கம் விலை உயர்வின் தாக்கம் என்னவாக இருக்கும்?
மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை
- செப்டம்பர் 06, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,005-க்கும், ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 07, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,005-க்கும், ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 08, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,060-க்கும், ஒரு சவரன் ரூ.80,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 09, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,150-க்கும், ஒரு சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 10, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,150-க்கும், ஒரு சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 11, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,150-க்கும், ஒரு சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 12, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,240-க்கும், ஒரு சவரன் ரூ.81,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : மீண்டும் மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.81,000-த்தை தாண்டியது!
கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை வெறும் உயர்வை மட்டுமே சந்தித்து வரும் நிலையில், தற்போது ஒரு சவரன் ரூ.82,000-த்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,240-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,9200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.