Gold Price : Gold Price : தங்கம் விலை ரூ.1,000 உயர்வு.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

Gold and Silver Price Hiked In Chennai | ஈரான் போரால் தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.125 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.

Gold Price : Gold Price : தங்கம் விலை ரூ.1,000 உயர்வு.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

10 Apr 2026 10:14 AM

 IST

சென்னை, ஏப்ரல் 10 : ஈரான் போர் (Iran War) காரணமாக அசாதாரனமான சூழல் நிலவி வருவதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.125 உயந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம், வெள்ளி

ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் புவிசார் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் கடும் மோதல்கள் காரணமாக தங்கம் நிலையற்ற தன்மையில் உள்ளது. சில நாட்கள் தொடர் உயர்வை சந்திக்கும் தங்கம், சில நாட்கள் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. தற்போது ஈரான் மீதான போரை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வை அடைந்துள்ளது.

இதையும் படிங்க : மாறாத ரெப்போ வட்டி விகிதம் – ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு நன்மையா?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இன்றைய நிகவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,125-க்கும், சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?