நிலையற்ற நிலையில் தங்கம்.. இப்போது முதலீடு செய்வது சரியானதா?.. முதலீட்டாளர்கள் கூறுவது என்ன?

Is This Right Time To Invest In Gold | ஈரான் போர் காரணமாக தங்கம் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் நிலையற்ற நிலையில் இருக்கும் நிலையில் அதில் முதலீடு செய்வது சிறந்ததா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிலையற்ற நிலையில் தங்கம்.. இப்போது முதலீடு செய்வது சரியானதா?.. முதலீட்டாளர்கள் கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

07 Apr 2026 12:45 PM

 IST

ஈரான் போர் (Iran War) காரணமாக தங்கள் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இவ்வாறு தங்கம் நிலை அற்ற தன்மையை கொண்டுள்ள நிலையில், தங்கத்தில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்று பொதுமக்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர். தங்கம் விலை நிலையற்ற நிலையில் இருக்கும் நிலையில், தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கம் விலை நிலையற்று இருக்க காரணம் என்ன?

ஈரான் போரால் சர்வதேச அளவில் புவிசார் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது, விற்பனை செய்வது என இருக்கின்றன. இதேபோல உலக முதலீட்டாளர்களும் தங்கத்தை வாங்குவது, விற்பனை செய்வது என இருக்கின்றனர். இதன் காரணமாக சர்வதேச தங்க சந்தையில் ஒவ்வொரு நாளும் மிக கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாளுக்கு நாள் தங்கம் விலை ஏறுவது, இறங்குவது என சீரற்ற நிலையில் உள்ளது.

இதையும் படிங்கம் : பிஎம் கிசான் திட்டத்தில் இந்த அட்டை மிக முக்கியம்.. இல்லையென்றால், பணம் கிடைக்காது!

நிலையற்ற நிலையில் தங்கம் – முதலீடு செய்வது எப்படி?

ஈரான் போர் காரணமாக தங்கம் கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இனி வரும் நாட்களிலும் இதே நிலை தொடரும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக காலையில் விலை உயர்வு, மாலையில் சரிவு அல்லது காலையில் சரிவு மற்றும் மாலையில் உயர்வு என முற்றிலும் நிலையற்ற தன்மையை தங்கம் கொண்டுள்ளது. தங்கம் இத்தகைய நிலையற்ற சூழலில் இருந்தாலும் அதில் முதலீடு செய்யலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : தங்கத்தை நகையாக வாங்குவது சிறந்ததா? நாணயமாக வாங்குவது சிறந்ததா?

Buy The Dip For Long Time Gain என்ற முறையில் தங்கத்தை வாங்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது தங்கம் விலை எப்போதெல்லாம் குறைவாக உள்ளதோ அப்போதெல்லாம் தங்கம் வாங்க வேண்டும். நீண்ட கால அடிப்படையில் இவ்வாறு முதலீடு செய்து வரும் பட்சத்தில் தங்கம் நல்ல கனிசமான அளவு லாபத்தை ஈட்டி இருக்கும். இந்த நிலையில், நீங்கள் வாங்கிய தங்கம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என உங்களுக்கு தோணும்போது தங்கத்தை விற்பனை செய்து லாபம் பெறலாம் என கூறுகின்றனர்.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்