Gold Price : உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

Gold Price Hiked and Silver Price Remain Same In Chennai | தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், தற்போது சீராக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price : உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

11 Feb 2026 10:32 AM

 IST

சென்னை, பிப்ரவரி 11 : உலக அளவில் தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) விலை கடந்த சில நாட்களாக கடும் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தங்கம் இன்று (பிப்ரவரி 11, 2026)  விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீராக இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

ஜனவரி மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான உயர்வை சந்தித்து வந்தது. குறிப்பாக ஜனவரி 29, 2026 அன்று ஒரு கிராம் தங்க ரூ.16,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,34,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை அதிக விலைக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது அன்று தான். தங்கம் இத்தகைய கடுமையான உச்சத்தை தொட்ட நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சத்தை தாண்டி சாமானியர்களின் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால், தங்கம் விலை படிப்படியாக சரிந்து தற்போது சீரான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

10 நாட்களுக்கான விலை நிலவரம்

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
02 பிப்ரவரி 2026 ரூ.13,950 ரூ.1,11,600
03 பிப்ரவரி 2026 ரூ.14,270 ரூ.1,14,160
04 பிப்ரவரி 2026 ரூ.14,900 ரூ.1,19,200
05 பிப்ரவரி 2026 ரூ.14,320 ரூ.1,14,560
06 பிப்ரவரி 2026 ரூ.14,250 ரூ.1,14,000
07 பிப்ரவரி 2026 ரூ.14,420 ரூ.1,15,360
08 பிப்ரவரி 2026 ரூ.14,420 ரூ.1,15,360
09 பிப்ரவரி 2026 ரூ.15,650 ரூ.1,17,200
10 பிப்ரவரி 2026 ரூ.14,580 ரூ.1,16,640
11 பிப்ரவரி 2026 ரூ.14,600 ரூ.1,16,800

இதையும் படிங்க : பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படவுள்ளதா? நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய தகவல்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

இன்று (பிப்ரவரி 11, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து இரு கிராம் ரூ.14,600-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

லாட்டரியில் ரூ.49 கோடி ஜாக்பாட்… நண்பருடன் பரிசுத் தொகையைப் பகிர முடிவு செய்த கர்நாடக இளைஞர்
வாரத்தின் முதல் நாளே கடுமையாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
யூடியூபின் Auto-Dubbing.. இனி கூடுதல் சிறப்புடன் பயனர்களுக்கு வழங்கப்படும்..
150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..