Gold Price : ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ரூ.91,000-த்தை தாண்டி விற்பனை!
Gold Price Hiked 880 Rupees Today | தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 10 : தங்கம் (Gold) கடந்த சில நாட்களாக குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று (நவம்பர் 10, 2025) அதிரடியாக விலை உயர்ந்து ரூ.91,000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.11,410-க்கும், ஒரு சவரன் ரூ.91,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை (Gold Price) நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிரடியாக விலை உயர்ந்த தங்கம்
2025, அக்டோபர் மாதத்தில் தங்கம் சரசரவென உயர்ந்து உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக அக்டோபர் 17, 2025 அன்று தங்கம் கடும் உச்சமாக ரூ.97,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக தங்கம் விலை ரூ.1 லட்சத்தை எட்டும் என்ற அச்சம் எழுந்தது. இந்த நிலையில் தான் தங்கம் அதிரடியாக விலை குறைந்தது. அதாவது, அக்டோபர் 22, 2025 அன்று தங்கம் சர்வதேச அளவில் 6.3 சதவீதம் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக தங்கம் தொடர் சரிவை காண தொடங்கிய தங்கம் கடந்த இரண்டு வாரங்களாக ரூ.90,000-க்கு உள்ளாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதையும் படிங்க : BNPL மூலம் பொருட்களை வாங்குவது உண்மையில் பாதுகாப்பானது இல்லையா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவதை கேளுங்கள்!




இரண்டு வாரங்களாக சரிவில் இருந்த தங்கம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 1 நவம்பர், 2025 | ரூ.11,310 | ரூ.90,480 |
| 2 நவம்பர், 2025 | ரூ.11,310 | ரூ.90,480 |
| 3 நவம்பர், 2025 | ரூ.11,350 | ரூ.90,800 |
| 4 நவம்பர், 2025 | ரூ.11,250 | ரூ.90,000 |
| 5 நவம்பர், 2025 | ரூ.11,180 | ரூ.89,440 |
| 6 நவம்பர், 2025 | ரூ.11,320 | ரூ.90,560 |
| 7 நவம்பர், 2025 | ரூ.11,270 | ரூ.90,160 |
| 8 நவம்பர், 2025 | ரூ.11,300 | ரூ.90,400 |
| 9 நவம்பர், 2025 | ரூ.11,300 | ரூ.90,400 |
| 10 நவம்பர், 2025 | ரூ.11,410 | ரூ.91,280 |
மேற்குறிப்பிட்டுள்ள பட்டியலின் படி தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களாக ரூ.90,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அதிரடியாக விலை உயர்ந்து ரூ.91,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கினால் அபராதம் விதிக்கும் ஐடி?.. இது தான் காரணம்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
இன்று (நவம்பர் 10, 2025) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது ரூ.90,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.