எட்டாக்கனியாய் மாறிய தங்கம்.. ஒரே நாளில் ரூ. 9,000 உயர்வு.. 17,000 ரூபாயை நெருங்கும் ஒரு கிராம் தங்கம்..
Gold Price Hike: நாளுக்கு நாள் இவ்வாறு அதிரடியாக தங்கம் விலை உயர்வை சந்தித்து வரும் சூழலில், தங்கம் பொதுமக்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.18,327-க்கும், ஒரு சவரன் ரூ.1,46,616-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜனவரி 28ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.15,610-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,850-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கோப்பு புகைப்படம்
தங்கம் விலை, ஜனவரி 29, 2026: தங்கம் விலை இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே சிறிதளவும் சரிவில்லாமல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜனவரி 29, 2026 தேதியான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 9,520 ரூபாய் உயர்ந்து ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 1,190 ரூபாய் உயர்ந்து ரூ.16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கம் விலை கிட்டத்தட்ட 10,000 ரூபாய் உயர்ந்துள்ளது.
எட்டாக்கனியாய் மாறும் தங்கம்:
நாளுக்கு நாள் இவ்வாறு அதிரடியாக தங்கம் விலை உயர்வை சந்தித்து வரும் சூழலில், தங்கம் பொதுமக்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.18,327-க்கும், ஒரு சவரன் ரூ.1,46,616-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜனவரி 28ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.15,610-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,850-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஜனவரி 27ஆம் தேதி ஒரு கிராம் ரூ.14,960-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் படிக்க: வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.. ரூ.1,22,000-த்தை தாண்டியது.. தலை சுற்ற வைக்கும் வெள்ளி!
ஜனவரி 26ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15,250-க்கும், ஒரு சவரன் ரூ.1,22,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஜனவரி 25ஆம் தேதி ஒரு கிராம் ரூ.14,750-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஏன் இந்த விலை உயர்வு?
தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, உலக அளவில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார பதற்றம், உலக வங்கிகளில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தங்கத்தின் மீது முதலீடு செய்வது, உலக பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலை போன்ற காரணங்களால் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரக்கூடிய நாட்களிலும் இந்த விலை உயர்வு தொடரும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடும் உயர்வில் வெள்ளி விலை:
தங்கம் விலை ஒரு பக்கம் உயர்ந்தாலும், வெள்ளி விலையும் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.425-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஆண்டு காலத்தில் வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
ஜனவரி 29ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.25 உயர்ந்து ரூ.425-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.4,25,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.