நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
Gold Price Cut Down Nearly 1700 Rupees in Chennai | தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தில் இருந்து வந்த நிலையில் இன்று (மே 1, 2025) அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,700 வரை குறைந்துள்ளது.

சென்னை, மே 1 : கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) கடும் உச்சத்தில் இருந்து வந்த நிலையில், இன்று (மே 1, 2025) அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 205 மற்றும் சவரனுக்கு ரூ.1,640 வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக ரூ.72,000-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கத்தின் விலை சற்று குறைந்து ரூ.70,000 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரே நாளில் ரூ.1,700 வரை குறைந்த தங்கம் விலை
- 22 ஏப்ரல் 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,290-க்கும் ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 23 ஏப்ரல் 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,015-க்கும் ஒரு சவரன் ரூ.72,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 24 ஏப்ரல் 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,005-க்கும் ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 25 ஏப்ரல் 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,005-க்கும் ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 26 ஏப்ரல் 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,005-க்கும் ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 27 ஏப்ரல் 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,005-க்கும் ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 28 ஏப்ரல் 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,940-க்கும் ஒரு சவரன் ரூ.71,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 29 ஏப்ரல் 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,980-க்கும் ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 30 ஏப்ரல் 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,980-க்கும் ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 1 மே 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ8,775-க்கும் ஒரு சவரன் ரூ.70,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு தங்கம் விலை கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக ஒரு கிராம் ரூ.9,290-க்கும், ஒரு சவரன் ரூ.74,320 -க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.70,000 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று (ஏப்ரல் 30, 2025), ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.8,775-க்கு ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (மே 1, 2025) தங்கம் விலை ரூ.1,700 வரை குறைந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கும் ஒரு சவரன் ரூ.70,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை மேலும் குறையுமா?
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.