வரலாற்றில் முதல் முறையாக ரூ.80,000-த்தை தாண்டியது தங்கம் விலை.. பொதுமக்கள் பேரதிர்ச்சி!

Gold Price Crossed 80,000 Rupees | தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக ரூ.80,000-த்தை தாண்டியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், தற்போது ஒரு சவரன் ரூ.80,000 தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

வரலாற்றில் முதல் முறையாக ரூ.80,000-த்தை தாண்டியது தங்கம் விலை.. பொதுமக்கள் பேரதிர்ச்சி!

மாதிரி புகைப்படம்

Updated On: 

06 Sep 2025 10:35 AM

 IST

சென்னை, செப்டம்பர் 06 : தங்கம் விலை (Gold Price) வரலாற்றில் முதல் முறையாக ரூ.80,000-த்தை தாண்டியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை கடும்  உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 06, 2025) ஒரே நாளில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.80,000-த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை ரூ. 1 லட்சத்தை எட்டும் என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்தது. இந்த நிலையில், தற்போது தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், இன்று  ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.80,000-த்தை தாண்டியும், 10 கிராம் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : GST 2.0 : ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரும் மாற்றம்.. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா?

ஒரே வாரத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

  • 31 ஆகஸ்ட், 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,620-க்கும், ஒரு சவரன் ரூ.76,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 1 செப்டம்பர், 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,705-க்கும், ஒரு சவரன் ரூ.77,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 2 செப்டம்பர், 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,725-க்கும், ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 3 செப்டம்பர், 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,805-க்கும், ஒரு சவரன் ரூ.78,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 4 செப்டம்பர், 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,795-க்கும், ஒரு சவரன் ரூ.78,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 5 செப்டம்பர், 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,865-க்கும், ஒரு சவரன் ரூ.78,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 6 செப்டம்பர், 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.1,005-க்கும், ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும்  படிங்க : 2028-க்குள் வெள்ளி விலை ரூ.2 லட்சத்தை எட்டும்.. அடித்து சொல்லும் பொருளாதார வல்லுநர்கள்!

இன்றைய தங்கம் விலை நிலவரம்

இன்று (செப்டம்பர் 06, 2025) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.1050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,040-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த கடும் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.