மீண்டும் ரூ.96,000-த்தை தாண்டிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Price Again Crossed 96,000 Rupees | தங்கம் கடந்த சில நாட்களாக அதிரடியாக விலை உயர்ந்து வரும் நிலையில், இன்று மேலும் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.96,000-த்தை தாண்டி விற்பனையாகிற்து.
சென்னை, டிசம்பர் 01 : தங்கம் கடந்த சில நாட்களாக கடும் உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான இன்று (டிசம்பர் 01, 2025) தங்கம் விலை (Gold Price) அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.12,070-க்கும், ஒரு சவரன் ரூ.96,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை சரிவில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.96,000-த்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் சரிவுக்கு பிறகு மீண்டும் உயரும் தங்கம் விலை
2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் சரசரவென உயர்ந்து வந்தது. குறிப்பாக அக்டோபர் 21, 2025 அன்று தங்கம் விலை ஒரு சவரன் அதிகப்படியாக் ரூ.97,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டும் நிலை ஏற்பட்டடதால் நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் தான் அக்டோபர் 22, 2025 அன்று தங்கம் விலை சர்வதேச சந்தையில் 6.3 சதவீதம் சரிவை சந்தித்தது.
இதையும் படிங்க : Provident Fund : அதிரடியாக உயரப்போகும் பிஎஃப் வட்டி.. வெளியான முக்கிய தகவல்!
சர்வதே சந்தையில் வீழ்ச்சியை சந்தித்ததை தொடர்ந்து தங்கம் கடும் சரிவை சந்தித்து வந்தது. இந்த நிலையில், தங்கம் தற்போது மீண்டும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் கடும் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்று (டிசம்பர் 01, 2025) தங்கம் மீண்டும் ரூ.96,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் – ரூ.96,000-த்தை தாண்டியது
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 22 நவம்பர், 2025 | ரூ.11,630 | ரூ.93,040 |
| 23 நவம்பர், 2025 | ரூ.11,630 | ரூ.93,040 |
| 24 நவம்பர், 2025 | ரூ.11,520 | ரூ.92,160 |
| 25 நவம்பர், 2025 | ரூ.11,720 | ரூ.93,760 |
| 26 நவம்பர், 2025 | ரூ.11,800 | ரூ.94,400 |
| 27 நவம்பர், 2025 | ரூ.11,770 | ரூ.94,160 |
| 28 நவம்பர், 2025 | ரூ.11,840 | ரூ.94,720 |
| 29 நவம்பர், 2025 | ரூ.11,980 | ரூ.94,840 |
| 30 நவம்பர், 2025 | ரூ.11,980 | ரூ.95,840 |
| 01 டிசம்பர், 2025 | ரூ.12,070 | ரூ.96,840 |
இதையும் படிங்க : இனி ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் இந்த வசதி கிடைக்கும்.. தெற்கு ரயில்வே அசத்தல் திட்டம்!
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இன்று (டிசம்பர் 01, 2025) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,070-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.