தங்க நகை கடன் Vs தனிநபர் கடன்.. இரண்டில் எது சிறந்தது?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!

Gold Loan vs Personal Loan | இந்தியாவை பொருத்தவரை பொதுமக்கள் தங்களுக்கு நிதி தேவைகள் ஏற்படும்போது வங்கிகளுக்கு சென்று தங்க நகை கடன் அல்லது தனிநபர் கடன் பெறுகின்றனர். இந்த நிலையில், இந்த இரண்டு கடன்களில் எது சிறந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்க நகை கடன் Vs தனிநபர் கடன்.. இரண்டில் எது சிறந்தது?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

12 Oct 2025 19:02 PM

 IST

மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நிதி தேவை ஏற்படும். அவ்வாறு நிதி தேவை ஏற்படும்போதெல்லாம் பெரும்பாலான பொதுமக்கள் வங்கி கடன் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வங்கி கடன்கள் அதிக வட்டி விகிதம் கொண்டிருக்கும் என்பதால் சிலர் தாங்கள் வைத்திருக்கும் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவர். இந்த நிலையில், தங்க நகை (Gold Loan) கடன், தனிநபர் கடன் (Personal Loan) இவை இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்க கடன்

தங்க நகைகள், தங்க நாணயங்கள் ஆகியவற்றை அடகு வைத்து அதற்கு பதிலாக பணம் வாங்குவதுதான் தங்க கடன். வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அடகு கடைகளிலும் இந்த தங்க கடன் வழங்கப்படுகிறது. தங்கத்தை அடகு வைக்கும் நாளில் தங்கத்தின் விலை என்னவாக உள்ளதோ அதில் 75 சதவீத தொகை கடனாக வழங்கப்படும். இந்த தங்க நகை பெற பெரியதாக ஆவணங்களை சமர்பிக்க வேண்டிய தேவை இல்லை. இந்த கடனை வாங்க நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை. தங்கத்தை அடகு வைத்த 1 மணி நேரத்திற்குள்ளாகவே பணம் கைக்கு வந்துவிடும்.

இதையும் படிங்க : Gold Price: எகிறும் தங்கம் விலை.. அதிரடி விலை உயர்வுக்கு காரணம் என்ன..?

தனிநபர் கடன்

தனிநபர் கடன், தங்க நகை கடனை விட முற்றிலும் வேறுபட்டது. காரணம், தனிநபர் கடனை பெறுவதற்கான முறை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தங்க நகை கடனை வாங்குவதை போல, தனிநபர் கடன் வாங்குவது எளிதாக இருக்காது. அதற்கு ஆவணங்களை சமர்பிப்பது முதல் கடனுக்காக காத்திருப்பது வரை என ஒரு நீண்ட வரைமுறையை பின்பற்ற வேண்டி இருக்கும்.

இதையும் படிங்க : இனி டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு OTP மட்டும் போதாது – ரிசர்வ் வங்கியின் புதிய நடவடிக்கை – காரணம் என்ன?

தங்க நகை கடன் Vs தனிநபர் கடன் – இரண்டில் எது பெஸ்ட்?

தங்க நகை கடனில் நாம் நகையை அடகு வைப்பதால் அதற்கு வட்டி சற்று குறைவாக இருக்கும். ஆனால், தனிநபர் கடனில் வட்டி அதிகமாக இருக்கும். தங்க நகை கடனை பொருத்தவரை சராசரியாக 7 முதல் 15 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படும். ஆனால், தனிநபர் கடனில் 10 முதல் 24 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படும். தங்க நகை கடனில் பிராசசசிங் கட்டணம் மிக குறைவாகவே வசூலிக்கப்படும் நிலையில், தனிநபர் கடனில் பிராசசசிங் கட்டணம் 1 முதல் 3 சதவீதம் வரை இருக்கும். இவை இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில் தங்க நகை கடன் சிறந்ததாக உள்ளது.