Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி.. இன்றைய விலை நிலவரம்!

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி.. இன்றைய விலை நிலவரம்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

28 Mar 2026 10:35 AM

 IST

சென்னை, மார்ச் 28 : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று (மார்ச் 28, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்த நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போரால் ஏற்ற, இறக்கங்களை எதிர்கொள்ளும் தங்கம், வெள்ளி

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் போருக்கு இடையே, ஈரான் உலகின் முக்கிய எண்ணெய் கப்பல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக உலக அளவில் கச்சா என்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் எண்ணெயின் மீது திரும்பியதன் காரணமாக, முதலீட்டாளர்களின் கவனமும் எண்ணெய் மீது திரும்பியது.

இதையும் படிங்க : உங்கள் மொத்த வருமானத்தையும் EMI குடித்துவிடுகிறதா?.. இந்த சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்!

இந்த சூழலில் தங்கத்தின் மீதான் முதலீடு குறைந்து கடும் சரிவை சந்தித்து வந்தது. இதற்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது மற்றும் ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது மீண்டும் தங்கத்தின் விலையை உயர செய்து வருகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.230 குறைந்து ஒரு கிராம் ரூ.13,660-க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்