வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.. ரூ.1,22,000-த்தை தாண்டியது.. தலை சுற்ற வைக்கும் வெள்ளி!
Gold and Silver Price Hit New Record In Chennai | சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஜனவரி 28 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக மிக கடுமையான விலை உயர்வை அடைந்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜனவரி 28, 2026) தங்கம் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதாவது, சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.15,000-த்தை தாண்டியும், ஒரு கிராம் வெள்ளி ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் உயர்வை சந்தித்து வரும் தங்கம்
உலக அளவில் நிலவும் புவிசார் பதற்றங்கள் காரணமாக தங்கம் நாளுக்கு நாள் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் மோதல் போக்கு இதற்கு முக்கிய காரணியாக உள்ளது. ஈரான் மீது போர் தொடுக்க உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக சவுதி அரேபியா குரல் கொடுத்துள்ளது. இது புவிசார் பதற்றத்தை மேலும் அதிகரித்து தங்கம் விலை உயர்வுக்கு மேலும் வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் மிக கடுமையான உயர்வை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : கடும் உச்சத்தில் இருக்கும் தங்கம், வெள்ளி.. தற்போது தங்கம் வாங்குவது சிறப்பானதா?
10 நாட்களில் ரூ.15,000 உயர்ந்த தங்கம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 19 ஜனவரி 2026 | ரூ.13,450 | ரூ.1,07,600 |
| 19 ஜனவரி 2026 | ரூ.13,900 | ரூ.1,11,200 |
| 19 ஜனவரி 2026 | ரூ.14,415 | ரூ.1,15,320 |
| 19 ஜனவரி 2026 | ரூ.14,200 | ரூ.1,13,600 |
| 19 ஜனவரி 2026 | ரூ.14,550 | ரூ.1,16,400 |
| 19 ஜனவரி 2026 | ரூ.14,750 | ரூ.1,18,000 |
| 19 ஜனவரி 2026 | ரூ.14,750 | ரூ.1,18,000 |
| 19 ஜனவரி 2026 | ரூ.15,025 | ரூ.1,20,200 |
| 19 ஜனவரி 2026 | ரூ.14,960 | ரூ.1,19,680 |
| 19 ஜனவரி 2026 | ரூ.15,330 | ரூ.1,22,640 |
இதையும் படிங்க : 2026 மத்திய பட்ஜெட்.. வருமான வரி குறித்து எழும் முக்கிய எதிர்பார்ப்புகள்!
ஒரே நாளில் அபார விலை உயர்வு அடைந்த தங்கம், வெள்ளி
இன்று (ஜனவரி 28, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.370 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,330-க்கும், சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,22,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ஒரு கிராம் ரூ.400-க்கும் கிலோவுக்கு ரூ.13,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.4,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.