தினமும் ரூ.7 முதலீடு போதும்.. மாதம் ரூ.5,000 வரை பென்ஷன் பெறலாம்.. அரசின் அட்டகாசமான திட்டம்!

Atal Pension Yojana Scheme | பொதுமக்கள் பென்ஷன் பெறுவதற்கான அட்டகாசமான திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா. இந்த திட்டத்தில் தினமும் ரூ.7 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 வரை பென்ஷன் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தினமும் ரூ.7 முதலீடு போதும்.. மாதம் ரூ.5,000 வரை பென்ஷன் பெறலாம்.. அரசின் அட்டகாசமான திட்டம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

06 May 2026 18:50 PM

 IST

இந்தியாவில் தற்போதுள்ள நிலவரப்படி தனியார் மற்றும் அரசு என எந்த துறையில் பணியாற்றினாலும், ஒருவர் அதிகபட்சமாக 60 வயது வரை மட்டுமே பணியாற்ற முடியும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவரால் அதிகபட்சமாக 60 வயது வரை மட்டுமே வேலை செய்து வருமானம் ஈட்ட முடியும். 60 வயதை கடந்தவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இதுவே தனியார் துறை ஊழியராக இருந்தால் 60 வயதுக்கு பிறகு அவரது மாத ஊதியம் கேள்விக்குறியாக மாறிவிடும். இந்த நிலையில், ஓய்வுக்கு பிறகு பொதுமக்கள் நிதி சிக்கல்கள் இல்லாமல் இருக்க பல வகையான  பென்ஷன் திட்டங்கள் அமலில் உள்ளன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் (APY – Atal Pension Yojana). இந்த திட்டத்தில் தினமும் ரூ.7 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 பென்ஷன் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்

குடிமக்கள் தங்களது ஓய்வு காலத்தை பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வழங்கும் அற்புதமான திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா. இந்த திட்டம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். காரணம், இந்த திட்டத்தில் தினமும் ரூ.7 முதலீடு செய்வதன் மூலம் மாதத்திற்கு ரூ.5,000 வரை பென்ஷன் பெற முடியும்.

இதையும் படிங்க : பணத்தை பாதுகாக்கவும், அழிக்கவும் முக்கிய ஆயுதமாக உள்ள மொபைல் எண்.. கண்டிப்பா தெரிந்துக்கொள்ளுங்கள்!

அடல் பென்ஷன் யோஜனா – சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வயதான காலத்தில் உங்களால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை பென்ஷன் பெற முடியும். இந்த திட்டத்தில் ஒருவர் தனது ஓய்வு காலத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு முதலீடு செய்யும் பட்சத்தில், அந்த நபருக்கு 60 வயதுக்கு பிறகு பென்ஷன் தொகை கிடைக்கும். இந்த திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யகிறீர்களோ, அவ்வவு குறைவான தொகையை முதலீடாக செலுத்தலாம்.

இதையும் படிங்க : கடனை அடைக்க இந்த இரண்டு விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்!

இந்த திட்டத்தில் 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். உதாரணமாக 18 வயதில் ஒருவர் தனது அடல் பென்ஷன் முதலீட்டை தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்தில் அவர் மாதம் ரூ.210 செலுத்த வேண்டும். அதாவது ஒரு நாளுக்கு ரூ.7 முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் 42 வயதுக்குள் அந்த நபர் ரூ.8.5 லட்சம் முதலீடு செய்திருப்பார். அதன் மூலம் அவர் 42 வயதுக்கு பிறகு மாதம் மாதம் ரூ.5,000 பென்ஷன் பெறலாம்.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..