பழைய பிஎஃப் கணக்குகளை பெற புதிய இணையதளம் அறிமுகம் – எப்படி பயன்படுத்துவது
EPFO New Aadhaar Portal : பயன்படுத்தப்படாமல் இருக்கும் பிஎஃப் கணக்குகளை மீண்டும் செயல்படுத்த ஒரு புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளது.இந்த புதிய தளத்திற்கு இ பிராப்தி (E PRAAPTI) என பெயரிடப்பட்டுள்ளது. இது ஆதார் அடிப்படையில் செயல்படும் ஒரு இணையதளமாகும்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் பணியாளர்களின் ஓய்வூதியம் மற்றும் வைப்பு நிதி ஆகியவற்றை நிர்வகிக்கும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அமைப்பு, இனி பயன்படுத்தப்படாமல் இருக்கும் பிஎஃப் கணக்குகளை மீண்டும் செயல்படுத்த ஒரு புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளது.இந்த புதிய தளத்திற்கு இ பிராப்தி (E PRAAPTI) என பெயரிடப்பட்டுள்ளது. இது ஆதார் அடிப்படையில் செயல்படும் ஒரு இணையதளமாகும். இந்தியாவில் கோடிக்கணக்கான பணியாளர்களின் ஒய்வூதியம் மற்றும் பிஎஃப் கணக்குகளை இபிஎஃப்ஓ பராமரித்து வருகிறது. இது பணியாளர்களுக்கு பாதுகாப்பான நிதி ஆதாயத்தை வழங்குகிறது.
பழைய பிஎஃப் கணக்குகளை பெற புதிய இணையதளம் அறிமுகம்
அவசர காலங்களில் தங்கள் தேவைக்கு ஏற்ப பணம் எடுத்து பயன்படுத்திக்கொள்ள இபிஎஃப்ஓ அனுமதிக்கிறது. மேலும் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது குறிப்பிட்ட தொகை நமக்கு கிடைக்கும். இது நம் எதிர்காலத்திற்கு உதவும். இந்த நிலையில் நம் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்துக்கு மாறும்போது, புதிதாக கணக்கு தொடங்கப்படுகிறது. பல பணியாளர்கள் தங்கள் பழைய பிஎஃப் கணக்குகளை பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் அவர்கள் செலுத்திய ஓய்வூதிய தொகை அப்படியே உரிமை கோரப்படாமல் இருக்கும்.
இதையும் படிக்க : வாடிக்கையாளர்கள் கவனத்துக்க… மே மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை
இந்த நிலையில் இபிஎஃப்ஓ புதிய இ பிராப்தி என பெயரிடப்பட்டுள்ள புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளம் ஆதார் அடிப்படையில் செயல்படும் ஒரு ஆன்லைன் பிளாட்ஃபார்ம் ஆகும். இந்த தளத்தின் மூலம் செயல்படாத பிஎஃப் கணக்குகளை தெரிந்துகொள்ள முடியும். பின்னர் அவற்றை தேவைப்பட்டால் நாம் மீண்டும் ஆக்டிவ் செய்ய முடியும். இதற்காக உங்கள் எச்ஆர் உதவி இல்லாமல் மற்றும் பிஎஃப் அலுவலகங்களுக்கு செல்லாமல் நீங்களாகவே செய்து கொள்ல முடியம்.
பலருக்கும் பயன்படுத்தப்படாத பிஎஃப் கணக்குகள் இருக்கும். வேலை மாறிய பிறகு அது பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கும். இதுபோன்ற கணக்குகளை ஆதார் மூலம் மீண்டும் ஆக்டிவ் செய்ய முடியும்.
இதையும் படிக்க : இனி ஆதாரில் இந்த விவரங்கள் இருக்காது.. புதிய தோற்றம்.. வெளியான முக்கிய தகவல்!
இந்த புதிய சிஎஸ்டம் மூலம் பயனர்களே தங்கள் பிஎஃப் கணக்கை நிர்வகிக்க முடியும். யுஏன் இணைக்கவும் முடியும். இதனால் பிஎஃப் அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. இபிஎஃஃப்ஓ அமைப்பு தற்போது டிஜிட்டலாக மாறி வருகிறது. இந்த 2026 ஆம் ஆண்டு மட்டும் இதுவரை 8.31 கோடி அளவுக்கு டிஜிட்டல் வழியாக பணம் எடுத்துள்ளனர். நாம் இப்போது பணம் எடுக்க கோரினால் 3 நாட்களில் நமக்கு பணம் வந்து விடும் அளவுக்கு விதி முறைகள் மாற்றப்பட்டுள்ளது. இது இபிஎஃப்ஓ 3.0 முறையில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.