2026-ல் இபிஎஃப்ஓ வட்டி விகிதம் 8.25% ஆகவே தொடரும்.. காரணம் இதுதான்!
EPFO Interest Rate Remain Same For 2026 FY | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் 2026, மார்ச் மாதத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் 8.25 சதவீதமாகவே வட்டி விகிதம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதிரி புகைப்படம்
- ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஊழியர்களின் பெயர்களில் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் ஊழியர்களின் மாத வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி உள்ளது.
- ஒருவேளை ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுக்கவில்லை என்றால், அந்த பணத்திற்கான வட்டியும் வழங்கப்படும். எனவே பிஎஃப் பணத்தை எடுக்காமலே இருக்கும் ஊழியர்களுக்கு சிறந்த தொகை கையில் கிடைக்கும். இவ்வாறு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
- அதாவது 2026 மார்ச் மாதத்தில் 8.25 சதவீதமாக உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் வட்டி, 8.25 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த ஆண்டும் வட்டி விகிதம் 8.25 சதவீதமாகவே தொடரும் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் கூறிவிட்டது.
- 2024 ஆம் நிதியாண்டில் 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி வட்டி உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது ஆண்டாக ஊழியர் வாருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் 8.25 சதவீதமாகவே தொடர உள்ளது.
- பங்குச்சந்தை மற்றும் மற்ற முதலீட்டு திட்டங்களை போன்றது அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம். அரசின் வருமானம் மற்றும் கடன்களை பொறுத்தே இது மாற்றம் செய்யப்படும். அந்த வகையில், இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us




