Emergency Fund : அவசர தேவைக்கு உதவும் எமெர்ஜென்சி ஃபண்ட்.. ஏன் அவசியம்?

Build Emergency Fund | பொதுமக்களுக்கு எப்போது வேண்டுமானாலும் எதிர்பாராத நேரங்களில் பொருளாதார தேவை ஏற்படலாம். இவ்வாறு எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எமெர்ஜென்சி ஃபண்ட் மிக முக்கியம் ஆகும். இந்த நிலையில், எமெர்ஜென்சி ஃபண்ட் ஏன் அவசியம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Emergency Fund : அவசர தேவைக்கு உதவும் எமெர்ஜென்சி ஃபண்ட்.. ஏன் அவசியம்?

மாதிரி புகைப்படம்

Updated On: 

04 Aug 2025 15:39 PM

மனிதர்களின் வாழ்வில் பொருளாதாரம் (Economy) மிக முக்கிய ஒன்றாகும். நிலையான பொருளாதாரம் இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிக்க முடியாமல் போய்விடும். இத்தகைய சூழலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால் அவசரகால தேவைக்காக எமர்ஜென்சி ஃபண்ட் (Emergency Fund) சேமிக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், எமர்ஜென்சி ஃபண்ட் என்றால் என்ன, அதை தேவை மற்றும் அவசியம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு பொதுமக்களும் கட்டாயம் சேமிக்க வேண்டிய எமெர்ஜென்சி ஃபண்ட்

பொதுமக்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பொருளாதார தேவை ஏற்படலாம். இத்தகைய சூழலில் அவசர மற்றும் எதிர்பாராத நேரங்களில் தேவைப்படும் பணத்தை பூர்த்தி செய்வதற்கு பணம்  தேவைப்படும். அந்த வகையில், எதிர்பாராத நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு அம்சம் தான் எமர்ஜென்சி ஃபண்ட். ஒருவேளை எமர்ஜென்சி ஃபண்ட் சேமித்து வைக்கவில்லை என்றால், நிதி தேவைகாக கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுவர். இதன் அவசியத்தை உணர்ந்தே ஒவ்வொரு நபரும் தங்களுக்கென எமர்ஜென்சி ஃபண்ட் உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொருளாதார வள்ளுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான FD.. 8.5 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

எமெர்ஜென்சி ஃபண்ட் எவ்வளவு சேமிக்க வேண்டும்?

பொதுமக்கள் தங்களது பொருளாதார நிலை, வருமானம் ஆகியவறை அடிப்படையாக கொண்டு மாத செலவு செய்வர். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒவ்வொருவருக்கும் தேவைகள் மற்றும் வாழ்க்கை முறை மாறுபடும் நிலையில், அதற்காக செலவு செய்யும் தொகையும் மாறுபடும். இந்த நிலையில், ஒருவரின் மாத தேவைக்கு ஏற்ப இந்த தொகையை சேமிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.

இதையும் படிங்க : மாதம் ரூ.20,000 சம்பளத்தில் கோடீஸ்வரர் ஆக முடியுமா? இந்த திட்டத்தை டிரை பண்ணுங்க!

எமெர்ஜென்சி ஃபண்ட் என்பது ஒருவருக்கு மாதம் செலவாகும்  தொகையின் மூன்று மடங்கு ஆகும். அதாவது, ஒருவர் மாதத்திற்கு ரூ.50,000 செலவு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அந்த நபர் எமெர்ஜென்சி ஃபண்ட் சேகரிக்க வேண்டும் என்றால் தனது மூன்று மாத செலவை சேமித்து இருப்பாக வைத்திருக்க வேண்டும். அதாவது எப்போதும் கையில் ரூ.1,50,000 எமெர்ஜென்சி ஃபண்ட்  ஆக வைத்திருக்க வேண்டும்.

திடீர் வேலை இழப்பு, பொருளாதார சிக்கல், உடல்நல குறைபாடு உள்ளிட்ட காரணங்கள் காரணமாக எதிர்பாராத நிதி தேவைகள் ஏற்படலாம். எனவே அவற்றை சமாளிக்கும் வகையில் இந்த எமெர்ஜென்சி ஃபண்ட் சேமிப்பு மிக முக்கியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.