Micro Payments உங்களது சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
How Micro Payments Affects Savings and Financial Health | பெரும்பாலான பொதுமக்கள் யுபிஐ செயலிகளான கூகுள் பே, போன் பே ஆகிய செயலிகளை பயன்படுத்தி தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். அவை அவர்களுக்கு மிகவும் எளிதானவையாக இருந்தாலும் அவை சேமிப்பை பாதிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மாதிரி புகைப்படம்
தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பண பரிவர்த்தனை முறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகளான கூகுள் பே (Google Pay), போன் பே (Phone Pay) ஆகியவற்றின் வருகையால் பொதுமக்கள் தங்களது அன்றாட பணி வர்த்தனைகளை அந்த செயலிகளின் மூலமே செய்துக்கொள்கின்றனர். மிக விரைவாக பண பரிவர்த்தை மேற்கொள்ள அந்த செயலிகள் பயனுள்ளதாக உள்ளதன் காரணமாக பொதுமக்களுக்கு அவை மிகவும் பிடித்த தேர்வாக உள்ளன. என்னதான் யுபிஐ செயலிகள் மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் சுலபமானவையாக இருந்தாலும் அவற்றின் மூலம் நிதி சேமிப்பு பாதிக்கப்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர் அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சேமிப்பை பாதிக்கும் சிறு பேமெண்ட்டுகள்
முன்பெல்லாம் பொதுமக்கள் தங்கள் கையில் பணம் வைத்து செலவு செய்து வந்தனர். இதன் காரணமாக அவர்களுக்கு தாங்கள் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது குறித்த தெளிவு இருந்தது. ஆனால், தற்போது அப்படி அல்ல. தற்போதைய சூழலில் பொதுமக்கள் யுபிஐ செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகள், பில் கட்டணம், நண்பர்களுக்கு பண அனுப்புவது என அனைத்து பண பரிவர்த்தனைகளையும் அவர்கள் யுபிஐ செயலிகள் மூலமே மேற்கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு தாங்கள் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதே தெரியாமல் போய்விடுகிறது.
இதையும் படிங்க : சுற்றுலா செல்ல லோன் வாங்க போறீங்களா?.. இந்த விஷயங்கள் குறித்து கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
கண்ணுக்கு தெரியாமல் மாத சப்ஸ்கிரிப்ஷன்களுக்கு செல்லும் பணம்
தற்போது அனைத்திற்கும் தனித்தனி செயலிகள் உள்ள நிலையில், அவற்றுக்கு தனித்தனி சப்ஸ்கிருப்ஷன்கள் (Subscription) செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்கள், யூடியூப், ஸ்பாட்டிஃபை, ஜியோ மியூசிக் உள்ளிட்ட பாடல் கேட்கும் செயலிகள், ஸ்விக்கி, செப்டோ உள்ளிட்ட செயலிகள் என அனைத்திற்கும் சப்ஸ்கிருப்ஷன் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இவை அனைத்து ஆட்டோமேட்டிக் முறையில் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்வதால் அதற்கு செல்லும் பணமும் கண்ணுக்கு தெரியாமல் சென்றுக்கொண்டே இருக்கிறது.
இதையும் படிங்க : திருமண பரிசு பொருட்களுக்கு வரி விதிக்கப்படுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
தேவையற்ற பொருட்களை வாங்க தூண்டும் BNPL அம்சம்
பொதுமக்கள் தங்களது பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், தேவையான பொருட்களை வாங்கவும் நடைமுறையில் உள்ள ஒரு அம்சம் தான் பிஎன்பிஎல் (BNPL – Buy Now Pay Later). இந்த அம்சத்தின் மூலம் பொருட்களை முன்கூட்டியே வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தை பிறகு செலுத்தலாம். இவ்வாறு வாங்கிய பொருளுக்கான பணத்தை பிறகு செலுத்த அனுமதி வழங்கப்படுவதால் பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு அத்தியாவசியமற்ற பொருட்களை இந்த அம்சத்தின் மூலம் வாங்கிக்கொள்கின்றனர்.
இவ்வாறு பல வகையில் பொதுமக்கள் தங்களது பணத்தை ஆன்னைல் பண பரிவர்த்க்தனை, மாத தவணை மற்றும் பிஎன்பிஎல் ஆகிய முறைகளின் மூலம் தங்களது கண்ணுக்கு தெரியாமல் பணத்தை செலவு செய்வதாகவும், அது அவர்களின் சேமிப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.