24 மணி நேரத்தில் டெலிவரி.. புதிய சேவையை அறிமுகம் செய்த இந்திய தபால் துறை!

India Post Launches New Service Today | இந்திய தபால் துறை பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 24 மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அம்சம் தான் அது.

24 மணி நேரத்தில் டெலிவரி.. புதிய சேவையை அறிமுகம் செய்த இந்திய தபால் துறை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

17 Mar 2026 17:57 PM

 IST

இந்திய தபால் துறை (India Post Department) பொதுமக்களுக்காக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஏற்கனவே ஏராளமான போஸ்டல் சேவைகள் இந்திய தபால் துறை மூலம் வழங்கப்படும் நிலையில், ஒரே நாளில் டெலிவரி கிடைக்கும் வகையில் புதிய சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது என்ன சேவை, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பல்வேறு சேவைகளை வழங்கி வரும் இந்திய தபால் துறை

இந்திய தபால் துறை 1854 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிக பழமையான தபால் துறையாக இருந்தாலும், காலத்திற்கு ஏற்ப நவீன வசதிகளை தபால் துறை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்திய தபால் துறையில் ஏற்கனவே விரைவு தபால் சேவை, போஸ்ட் பேமெண்ட் வங்கி, அஞ்சலக சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது 24 மணி நேரத்தில் டெலிவரி செய்யக்கூடிய அதி விரைவு தபால் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பெண்களுக்கு அதிக லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

24 மணி நேரத்தில் டெலிவரி செய்யும் சேவை அறிமுகம்

இந்திய தபால் துறை தற்போது புதிய முயற்சியாக 24 மணி நேரத்தில் டெலிவரி செய்யக்கூடிய அதிவிரைவு தபால் சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, இந்த சேவையின் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த தபால்களை அடுத்த நாளே அனுப்பலாம். இன்று முதல் அறிமுகமாகும் இந்த சேவையின் மூலம், முக்கியத்துவம் வாய்ந்த கடித பரிமாற்றங்களை இதன் மூலம்  மேற்கொள்ள முடியும்.

இதையும் படிங்க : தங்கம் விலை 30% சரிய வாய்ப்பு.. தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி கணிப்பு!

முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் பிறகு இந்த திட்டம் படிப்படியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தனியார் கொரியர் சேவை நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய அதிவிரைவு சேவையை வழங்கி வந்த நிலையில், தற்போது இந்திய அஞ்சல் துறையும் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்