வீட்டு உபயோக சிலிண்டர் பயனாளர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு.. இதனை செய்யவில்லை என்றால் சிக்கல்!

Important Announcement For Domestic Gas Cylinder Users | ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் நபர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர் பயனாளர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு.. இதனை செய்யவில்லை என்றால் சிக்கல்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

14 Mar 2026 13:33 PM

 IST

ஈரான் (Iran) மீது அமெரிக்கா (America) மற்றும் இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் , இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் போய்விடுமோ என பொதுமக்கள் கேஸ் சிலிண்டர்களை போட்டி போட்டுக்கொண்டு புக் செய்ய தொடங்கிய நிலையில், கேஸ் சிலிண்டர் புக் செய்வதற்கான சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்தது. அந்த வகையில், தற்போது கேஸ் சிலிண்டர் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு முக்கிய அறிவிப்பு

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர்கள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. அதுமட்டுமன்றி, பொதுமக்கள் கேஸ் சிலிண்டர் புக் செய்வதற்கான கால அவகாசத்தையும் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் அறிவுரையின் படி எண்ணெய் நிறுவனங்களும் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் தான், கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : ஏடிஎம் கார்டு இல்லாமலே UPI பின் செட் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

பயோமெட்ரிக் ஆதார் அங்கீகரிப்பு முறையை முடிக்க வேண்டும்

இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய மற்றும் எரிவாயு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி வாடிக்கையாளர்களும் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகரிப்பு முறையை முடிக்க வேண்டியது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தும் அனைவரும் இ கேஒய்சி முறையை முடிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது என்றும்

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் புக் செய்ய “Smart Booking”.. இண்டேன் கேஸ் அறிமுகம் செய்த புதிய அம்சம்!

கேஸ் சிலிண்டர் கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால், கேஸ் சிலிண்டர் புக் செய்வதில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட பெண் உயிரோடு வந்ததால் பரபரப்பு - பிலிபித்தில் நடந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் விளக்கம்”
எரிவாயு தட்டுப்பாடு.. சிறிய உணவகங்கள் மூடல், கருப்புச் சந்தையில் சிலிண்டர் ரூ.3000 வரை உயர்வு..
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல இந்தியாவுக்கு அனுமதி.. வெளிய்றவுத்துறை அமைச்சர் சொன்ன விஷயம்..
ஈராக் அருகே எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு