இனி சுங்கச்சாவடிகளில் பணம் வாங்கப்படமாட்டாது.. ஏப்ரல் 1 முதல் வரும் முக்கிய நடைமுறை!

Tollgate New Rules From April 2026 | இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஏப்ரல் 1, 2026 முதல் சுங்க கட்டணம் செலுத்த பணம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இனி சுங்கச்சாவடிகளில் பணம் வாங்கப்படமாட்டாது.. ஏப்ரல் 1 முதல் வரும் முக்கிய நடைமுறை!

மாதிரி புகைப்படம்

Published: 

21 Feb 2026 14:16 PM

 IST

இந்தியா (India) முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் (Tollgate) இயங்கி வரும் நிலையில், சுங்கச்சாவடி கட்டண முறை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஏப்ரல் 01, 2026 முதல் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் முறை முழுவதுமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த முக்கிய அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றம்

இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு அந்த வாகனம் எந்த வகையை சேர்ந்தது என்பது பொருத்து கட்டணம் வசூலிக்கப்படும். முன்பெல்லாம் ஒவ்வொரு வாகனமும் சுங்கச்சாவடியில் நின்று பணம் செலுத்தி சுங்க கட்டணம் செலுத்தி வந்தன. அதன் பிறகு ஃபாஸ்டேக் (FASTag) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், பலரும் ஃபாஸ்டேகுக்கு மாறிவிட்டனர். அதாவது தற்போதைய நிலவரப்படி 98 சதவீதம் மக்கள் ஃபாஸ்டேக் பயன்படுத்துகின்றனர். ஆனால், சிலர் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தி கட்டணம் செலுத்தும் முறையை கையாண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : இனி ஆதார் பாதுகாப்பு குறித்த கவலை வேண்டாம்.. விரைவில் வர உள்ள அசத்தல் அம்சம்!

ஏப்ரல் 1, 2026 முதல் சுங்கச்சாவடிகளில் பணம் வசூலிக்கப்படாது

இந்த நிலையில் தான் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் 1, 2026 முதல் சுங்கச்சாவடிகளில் பணம் வசூலிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல் ஃபாஸ்டேஜ் அல்லது யுபிஐ (UPI – Unified Payment Interface) முறைகளில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், பணம் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆதாரில் இத பண்ணலனா உங்கள் வங்கி கணக்கில் இருக்கு பணத்துக்கு சிக்கல்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

செயற்கை கோள்கள் மூலம் சுங்கச்சாவடி கட்டணத்தை வசூல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில்  சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, விரைவில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன.  இதன் மூலம்  ஏப்ரல் 1, 2026 முதல் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த கையில் பணம் வாங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!