இந்தியாவின் முதல் ஃபிரஷர் குக்கர் முதல் ஐஎஸ்ஓ சான்றிதழ் வரை… தமிழகத்தின் பட்டர்ஃபிளை நிறுவனம் பற்றி தெரியுமா?
Inspiring Success Story : தமிழ்நாட்டில் துவங்கப்பட்ட பட்டர்ஃபிளை நிறுவனம் தங்களது புதுமையான கண்டுபிடிப்புகளால் உலக அளவில் வீட்டு உபயோக போருட்களின் உற்பத்தியில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவின் முதல் பிரஷர் குக்கர் முதல் பல முக்கிய தயாரிப்புகளை அந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

மாதிரி புகைப்படம்
வீட்டு உபயயோக பொருட்களான குக்கர், மிக்ஸி, கிரைண்டர் என்றால் சட்டென நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று. பட்டர்ஃபிளை (Butterfly). தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று உலக அளவில் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமாக வளர்ந்திருக்கிரது. சென்னையில் (Chennai) கடந்த 1986 ஆம் ஆண்டு பட்டர்ஃபிளை காந்திமதி அப்ளையன்சஸ் லிமிட்டட் என்ற பெயரில் சமையல் உபயோக பொருட்கள் நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை வி.எம்.லட்சுமி நாராயணன் மற்றும் வி.எம்.குமரசேன் ஆகியோர் தலைமையில் துவங்கப்பட்ட நிறுவனம், இன்று இரண்டு தலைமுறைகள் கடந்து இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் எல்பிஜி அடுப்புகள் விற்பனை செய்யப்பட்டது. மக்கள் இந்த நிறுவனத்துக்கு அளித்த ஆதரவின் காரணமாக, மற்ற சமையல் கருவிகள் தயாரிப்பிலும் இறங்கியது. அதன் வெற்றிக் கதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
குறுகிய காலத்திலேயே அந்நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை அந்த நிறுவனம் அடைந்தது.கடந்த 1986 ஆம் ஆண்டு பிரைவேட் லிமிட்டட் நிறுவனமாக தொடங்கப்பட்ட நிறுவனம், 4 ஆண்டுகளிலேயே பப்ளிக் லிமிட்டட் நிறுவனமாக வளர்ந்தது. கேஸ் ஸ்டவ் உடன் விற்பனையை தொடங்கிய நிறுவனம், பின்னர் மிக்ஸி, கிரைண்டர் உற்பத்தியும் ஆரம்பிக்கப்பட்டது. பொருட்களின் தரத்தில் இவர்கள் காட்டிய அக்கறையின் காரணமாக மக்களின் பேராதரவை பெற்றனர்.
இதையும் படிக்க : ரூ.15,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட கவின்கேர் நிறுவனம் – பன்னாட்டு நிறுவனங்களை வென்ற தமிழர்!
இந்தியாவின் முதல் பிரெஷர் குக்கர்
சென்னையில் துவங்கப்பட்ட பட்டர்ஃபிளை நிறுவனம் விரைவில் இந்தியா முழுவதும் விரிவடைந்தது. இதற்கு காரணம் அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய பொருட்களின் காரணமாக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து கடந்த 1989 காலகட்டங்களில் இந்தியாவின் முதன்முறையாக பிரெஷர் குக்கர் உற்பத்தியையும் பட்டர்ஃபிளை துவங்கியது. இதுவே இந்த நிறுவனத்துக்கு திருப்புமுனையாக அமைந்ததது. குறைந்த விலையில் தரமான பிரெஷர் குக்கரை இந்த நிறுவனம் உற்பத்தி செய்தது. இது மட்டுமல்லாமல் இந்தியாவில் முதல் வேக்யூம் ஃபிளாஸ்க்கையும் இந்த நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முதல் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற கேஸ் ஸ்டவ்
இந்த நிறுவனத்தின் புதுமையான அனுகுமுறை காரணமாக மக்களின் மனங்களை வென்றது. இந்த நிறுவனம் கடந்த 1992 ஆம் ஆண்டு சொந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரேஸிங் மெஷினை கண்டுபிடித்தனர். இந்த மெஷின் அதுவரை பொருட்கள் தயாரிப்பில் இருந்த ஆபத்தான காப்பர் பிளேட்டிங் முறையை மாற்றியது. இது தங்கள் தொழிலாளர்கள் மேல் அந்நிறுவனம் கொண்டுள்ள அக்கறையையும் காட்டியது.
இதையும் படிக்க : உசிலம்பட்டி முதல் இந்திய ராணுவம் வரை…. பெர்ரிஸ் பிஸ்கட்டின் வெற்றிக்கான காரணம் என்ன?
பட்டர்ஃபிளை நிறுவனத்தின் முக்கிய சாதனைகள்
- இத்தனை சிறப்புகளால் கடந்த 1992 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அந்நிறுவனம் மும்பை பங்குசந்தை (BSE) லிஸ்டிங்கில் இருந்தது. அதுவும் நிறுவனம் துவங்கப்பட்ட 6 வருடங்களிலேயே இந்த சாதனையை அந்த நிறுவனம் செய்து காட்டியது. இதோடு அந்த நிறுவனத்தின் வளர்ச்சி முடிந்துவிடவில்லை.
- கடந்த 1999 ஆம் ஆண்டு 3 ஸ்டோன் டேபிள் டாப் வெட் கிரைண்டரை உருவாக்கி இந்த நிறுவனம் அதற்கும் காப்புரிமையும் பெற்றது.
- அதோடு இந்தியாவில் முதன்முறையாக ISO 9000 சான்றிதழ் பெற்ற கேஸ் ஸ்டவ், மிக்சர் கிரைண்டர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமை அதற்கு கிடைத்தது.
- கடந்த 2014 ஆம் ஆண்டு எல்எல்எம் அப்ளையன்சஸ் லிமிட்டட் நிறுவனத்திடம் இருந்து சமையல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் பிரிவை வாங்கி தனது நிறுவனத்தின் வளர்ச்சியை பெரிதாக்கியது.
- இந்தியாவில் முதன்முறையாக BEE 2-Star Rated LPG Stove தயாரிப்பு நிறுவனமாக அங்கீகாரம் பெற்றது.