பெங்களூரு, ஐதராபாத் – சென்னை இடையே அதிவேக ரயில் வழித்தடம்.. பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!
Fastest Train Routes Between Bengaluru, Hyderabad - Chennai | சென்னை - பெங்களூரு இடையே மற்றும் ஐதராபாத் - சென்னை இடையே அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் 2026 மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
டெல்லி, பிப்ரவரி 01 : கர்த்தவ்யா பவனில் 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் (2026 – 2027 Union Budget) தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தொடர்பான முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அந்த வகையில் இந்தியாவில் புதியதாக 7 அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். அதில், சென்னை – பெங்களூரு இடையே மற்றும் ஐதராபாத் – சென்னை இடையே அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
புதிய 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் – பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் அதிவேக ரயில் வழித்தடங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஐதராபாத் முதல் சென்னை, சென்னை முதல் பெங்களூருவுக்கு அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும் என்றும் நகரங்களை அதிவேகமாக இணைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இந்த வளர்ச்சி இணைப்பான்களின் நோக்கம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் கனிம வள மையம் அமைக்கப்படும்.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு!
சென்னை – பெங்களூரு, சென்னை – ஐதராபாத் வழித்தடங்கள்
அதனை தொடர்ந்து புதிய அதிவேக ரயில் தடங்கள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
- மும்பை மற்றும் புனே இடையேயான வழித்தடம்
- புனே மற்றும் ஐதராபாத் இடையேயான வழித்தடம்
- ஐதராபாத் மற்றும் சென்னை இடையேயான வழித்தடம்
- ஐதராபாத் மற்றும் சென்னை இடையேயான வழித்தடம்
- சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான வழித்தடம்
- டெல்லி மற்றும் வாரணாசி இடையேயான வழித்தடம்
- வாரணாசி மற்றும் சிலிகுரி இடையேயான வழித்தடம்
இவ்வாறு மேற்குறிப்பிட்ட 7 வழித்தடங்களில் புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தமிழக பாரம்பரியத்தை போற்றும் பட்டுச் சேலை.. 2026 பட்ஜெட்டில் கவனம் ஈர்த்த நிர்மலா சீதாராமன் உடை!
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 7 புதிய வழித்தடங்கள் ரயில் போக்குவரத்து துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி போக்குவரத்தை மிகவும் எளிதானதாகவும், விரைவானதாகவும் மாற்றும் என கூறப்பட்டுகிறது.