Pre Approval முதல் Easy EMI வரை.. பண்டிகை காலத்துக்கு லோன் வழங்கும் பஜாஜ் ஃபைனான்ஸ்!
Bajaj Finserv Festive Loan | இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசை கட்டி நின்றுக்கொண்டு இருக்கின்றன. பண்டிகை காலங்களின்போது பொதுமக்களுக்கு அதிக பணம் தேவைப்படும் என்பதால் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான கடன் அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் கலைகட்ட தொடங்கியுள்ளது. நவராத்திரி, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரிசைக்கட்டி நின்றுக்கொண்டு இருக்கின்றன. பொதுவாக பண்டிகை காலங்களின்போது பொதுமக்கள் புத்தாடை எடுப்பது, நகை வாங்குவது உள்ளிட்டவற்றில் அதிக பணத்தை செலவு செய்வர். இதன் காரணமாக அவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தான் பஜாஜ் ஃபைனாஸ் (Bajaj Finance) அசத்தலான கடன் அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் பண்டிகைகளை திருவிழாவாக கொண்டாடும் பொதுமக்கள்
இந்தியாவில் பண்டிகை காலங்களின் போது கொண்டாட்டங்களுக்கு குறைவே இருக்காது. புத்தாடை எடுப்பது, புதிய நகைகளை வாங்குவது, இனிப்பு வகைகளை வாங்குவது, வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக பண்டிகையை கொண்டாடுவர். இதன் காரணமாக வழக்கமான மாதங்களை விட பண்டிகை காலங்களில் அதிக செலவு ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு தான் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.55 லட்சம் வரை முன் அனுமதியுடன் கூடிய கடன் வழங்கி வருகிறது.
இதையும் படிங்க : ரூ.10 லட்சம் வரை இன்சூரன்ஸ் கிடைக்கும் அஞ்சலக திட்டம்.. இத்தனை சிறப்பு அம்சங்களா?
பண்டிகை கால சிறப்பு கடன் – பஜாஜ் ஃபைனான்ஸ் அதிரடி
பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு நிதி தேவை அதிகாமாக இருக்கும் என்பதை கடுத்தில் கொண்டு பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் இந்த அசத்தல் கடன் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் கூற்றுப்படி கடன் தொகையை வாடிக்கையாளர்கள் ஷாப்பிங், பயணம், குடும்ப விழாக்கள் ஆகியவற்றுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
கடன் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
இந்த கடனின் முக்கிய மற்றும் மிக சிறந்த அம்சமாக கருதப்படுவது, மிக விரைவாக கடன் அனுமதி வழங்கப்படுவது தான். இந்த நிலையில், கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் எண்ணை பதிவிட்டுள்ள ஓடிபி மூலம் தங்களுக்கு முன் அனுமதியுடன் கூடிய கடன் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளதாக என்பதை தெரிந்துக்கொள்ளலாம். ஒருவேளை வாடிக்கையாளுருக்கு முன் அனுமதியுடன் கடன் தயாராக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பம் மற்றும் அதற்கான ஆவணங்களை சமர்பித்த அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே வங்கி கணக்கில் பணம் வந்துவிடும்.
இதையும் படிங்க : வருமான வரி தாக்கல் செய்யவில்லையா?.. உங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு.. என்னனு தெரிஞ்சிக்கோங்க!
கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது சூழலுக்கு ஏற்ப 12 மாதங்கள் முதல் 96 மாதங்கள் வரை மாத தவணை செலுத்த அனுமதி வழங்கப்படுகிறது. பண்டிகை காலம் பொதுமக்களுக்கு பாரமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக பஜாஜ் ஃபைனான்ஸ் இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.