யுபிஐ-ல் இஷ்டத்திற்கு செலவு செய்யும் நபரா நீங்கள்.. இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு தான்!
Follow These Tips While Paying Through UPI | பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட செலவுகளுக்காக யுபிஐ அதிகம் பயன்படுத்துவர். ஆனால், பலர் யுபிஐ மூலம் கண்மூடித்தனமாக செலவு செய்து விடுவர். இந்த நிலையில், அவர்கள் இந்த சில டிப்ஸ்களை பின்பற்றலாம்.

மாதிரி புகைப்படம்
முன்பெல்லாம் கடைக்கு சென்று ஏதேனும் பொருள் வாங்கினால் பர்சில் இருக்கும் பணத்தை எடுத்து கொடுப்போம். அப்போது நாம் எவ்வளவு பணம் செலவு செய்கிறோம், கையில் இன்னும் எவ்வளவு பணம் மீதம் உள்ளது என்பது நன்றாக தெரியும். இத்தைய சூழலில் அதற்கு ஏற்ப செலவு செய்வோம். ஆனால், இப்போது அத்தகைய சூழல் எதுவும் இல்லை. காரணம், தற்போதைய கால சூழலில் பெரும்பாலான மக்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் பணத்தை செலவு செய்கின்றனர். ஒரு ரூபாய் முதல் ஆயிரக்கணக்கிலான தொகைகளையும் அவர்கள் யுபிஐ மூலமே செலுத்துகின்றனர்.
இதன் காரணமாக தாங்கள் எவ்வளவு பணம் செலுத்துகின்றோம் என்பதையே மறந்துவிடுகின்றனர். இதன் காரணமாக மனிதர்களிடையே சேமிப்பு மற்றும் நிதி தொடர்பான சிக்கல் ஏற்படுகிறது. இந்த நிலையில், இந்த சிக்கலில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பான முறையில் பணத்தை செலவு செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தினசரி வரம்பை நிர்ணயம் செய்யுங்கள்
நீங்கள் கண்ணில் காணும் பொருட்களை உடனே வாங்க வேண்டும் என நினைக்கும் நபராக இருந்தீர்கள் என்றால் உங்களது யுபிஐ-ல் வரம்பை நிர்ணயம் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் வரம்பை நிர்ணயம் செய்யும் பட்சத்தில் உங்களால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் செலுத்த முடியாது. அப்போது நீங்கள் அதிகமாக செலவு செய்கிறீர்கள் என்பதை உணருவீர்கள்.
சிறு செலவுகளுக்கு பணம் கொடுங்கள்
உங்களது சிறிய தேவைகளுக்கு, செலவுகளுக்கு கையில் இருந்து பணம் கொடுங்கள். காரணம் சிறிய தொகை தானே என நினைத்து யுபிஐ மூலம் எந்த வித கவலையும் இன்றி செலவு செய்வோம். இதுவே கையில் இருந்து பணத்தை செலவு செய்தால் எவ்வளவு பணம் செலவு செய்கிறோம் என்பது தெரியும்.
இதையும் படிங்க : பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கம் வாங்க போறீங்களா.. இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
மாதாந்திர பட்ஜெட் மற்றும் கண்காணிப்பு
ஒவ்வொரு மாதமும் ஒரு பட்ஜெட் போட்டு வார இறுதியில் உங்கள் வங்கி ஸ்டேட்மெண்ட்டை பார்த்து தேவையற்ற செலவுகளை கண்டறியுங்கள். அது உங்களை அடுத்த முறை தேவையில்லாத செலவுகளை செய்வதில் இருந்து தடுக்க உதவும்.
யுபிஐ தானே என கண்மூடித்தனமாக பணத்தை செலவு செய்யும் நபர்களுக்கு மேற்குறிப்பிட்ட இந்த சில டிப்ஸ்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.