Bank Holiday : டிசம்பர் மாதத்தில் மொத்தம் 19 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!

19 Days Bank Holidays In December 2025 | ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் டிசம்பர் 2025, வங்கிகளுக்கு மொத்தம் 19 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், எந்த எந்த நாட்களுக்கு விடுமுறை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Bank Holiday : டிசம்பர் மாதத்தில் மொத்தம் 19 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

27 Nov 2025 14:03 PM

 IST

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு வார விடுமுறை, பண்டிகைகள் மற்றும் அரசு விழாக்களின் போது சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். தற்போது 2025, நவம்பர் மாதம் முடிவடைய உள்ள நிலையில், விரைவில் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பது குறித்தும், வங்கிகள் செயல்படாத அந்த நாட்களில் வங்கி சேவைகளுக்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

டிசம்பர் மாதத்தில் மொத்தம் 19 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

  • டிசம்பர் 01, 2025 – மாநில துவக்க நாள் என்பதால் இடாநகர் மற்றும் கோஹிமா ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 03, 2025 – புனித சவேரியார் பண்டிகை என்பதால் பஞ்சாய் பகுதியில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 07, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 12, 2025 – பா டோகன் நெஞ்சமிஞ்சா நினைவு நாள் என்பதால் அன்றைய தினம் ஷில்லாங்கில் உள்ள வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 13, 2025 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 14, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 18, 2025 – ஷில்லாங்கில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 19, 2025 – கோவா கொண்டாட்ட தினம்  என்பதால் அன்றைய தினம் பஞ்சாயில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 20, 2025 – லூசூங் பண்டிகையை ஒட்டி கேங்க்டாக்கில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 21, 2025 –  மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 22, 2025 – நம்சூங் பண்டிகையை ஒட்டி கேங்க்டாக்கில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 24, 2025 – கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் என்பதால் அன்று கோஹிமா,  ஷில்லாங் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 25, 2025 – கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 26, 2025 – கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கோஹிமா மற்றும் ஷில்லாங் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 27, 2025 – கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக கோஹிமாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 28, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 30, 2025 – யு கியாங் நங்பாக் நினைவு தினம் என்பதால் அன்றைய தினம் ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 31, 2025 – புத்தாண்டு இரவு என்பதால் அன்றைய தினம் ஐஸ்வால், இம்பால் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் செயல்படாத போது என்ன செய்ய வேண்டும்?

மேற்குறிப்பிட்ட இந்த 19 நாட்கள் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏடிஎம் மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனு தாக்குதல்களை தாங்கக் கூடிய செயற்கை மிதக்கும் தீவை உருவாக்கும் சீனா
தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?
ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைத்த பெண்!